அண்ணா பெயரில் புதிய தமிழ் விருது
சென்னை:
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பெயரில் ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசைக் கொண்ட அண்ணா விருதையும், முதலமைச்சர்அறிவியல் தமிழ் விருதையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச தமிழ்க் கழகத்தின் சார்பில் அண்ணா விருது வழங்கப்படும். இதன்படி ரூ. 10 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்வழங்கப்படும். சர்வதேச அளவில் தமிழ் மொழிக்கு சிறந்த சேவை ஆற்றுவோருக்கு இந்த விருது வழங்கப்படும்.
இதேபோல, முதலமைச்சர் அறிவியல் தமிழ் என்ற புதிய விருதும் அறிவிக்கப்படுகிறது. இதன்படி, கம்ப்யூட்டர்களில்பயன்படுத்தக் கூடிய சிறந்த தமிழ் சாப்ட்வேரை உருவாக்குவோருக்கு இந்த விருது வழங்கப்படும்.
மேலும், தமிழுக்காக சிறந்த சேவையாற்றும் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழ்த் தாய்விருது வழங்கப்படும்.
தமிழ் இலக்கியவாதிகளான மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சக்தி வை கோவிந்தன், தொ.பொ. மீனாட்சி சுந்தரம்,டி.என்.குமாரசாமி ஆகியோரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன.
இதைத் தொடர்ந்து அவர்களது வாரிசுகளுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்றார் அமைச்சர் சண்முகம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications