மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி தர மறுக்கும் தமிழக அரசு: காஞ்சி மடம் புதிய வழக்கு
சென்னை:
சென்னை அருகே மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தடையில்லா சான்றிதழ் தராமல் தமிழக அரசு இழுத்தடிப்பதாக காஞ்சிசங்கர மடத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
காஞ்சி காமகோடி பீடத்தின் சார்பில் மருத்துவக் கல்லூரி மற்றும் நவீன மருத்துவமனை தொடங்க திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவமனைக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு இருந்த கடன்களை காஞ்சி காமகோடி மடம் செலுத்திவிட்டு அந்த மருத்துமனையைவாங்கியது. அந்த இடத்தில் மருத்துவக் கல்லூரி தொடங்க தடையில்லா சான்றிதழ் (நோ-அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்) தருமாறுதமிழக அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டது.
அதிகாரிகள் அந்த இடத்தைப் பார்வையிட்டு 7 குறைகளை சுட்டிக் காட்டினர். அந்தக் குறைகளை நிவர்த்தி செய்வதாகஉறுதியளித்தோம்.
மேலும் இந்திய மருத்துவக் கவுன்சின் விதிமுறைகளையொட்டி ரூ. 52.61 கேடிை செலவில் மருத்துவக் கல்லூரிக்கான கட்டடம்கட்டி முடிக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரிக்கும் மருத்துவமனைக்குமான கருவிகள் வாங்க ரூ. 32.53 கோடி செலவிடப்பட்டது.
கடந்த ஜனவரி வரை மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை ஊழியர்களுக்கு ஊதியம் தர மட்டும் ரூ. 15.21 கோடிசெலவிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்னும் இந்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அனுமதி தராமல் அரசு இழுத்தடிப்பதால் காஞ்சி மடத்தின்அறக்கட்டளைக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டு வருகிறது.
இது தொடர்பாக கடந்த ஆண்டே வழக்குப் போட்டோம். அப்போது இரு வாரங்களில் இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதாகநீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்தது. ஆனால், அதையும் செய்யவில்லை.
நீதிமன்றத்தில் உறுதியளித்தபடி அரசு நடந்து கொள்ளவில்லை. இதனால் தான் மீண்டும் ரிட் மனு தாக்கல் செய்துள்ளோம். இந்தவிஷயத்தில் அரசின் செயல்பாடுகள் உள்நோக்கம் கொண்டவையாக உள்ளன.
எனவே உடனே கல்லூரிக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனையை அபகரிக்க மன்னார்குடி கும்பல் முயல்வதாகவும், அதை காஞ்சி மடம் ஏற்காததால் தான் இவ்வளவுபிரச்சனையும் என்று கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications