எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு: ஜெ. சலுகை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக சட்டசபை சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோரின் ஊதியத்தை உயர்த்தி முதல்வர் ஜெயலலிதாஉத்தரவிட்டுள்ளார்.

சட்டசபையில் இன்று விதி எண் 110ன் கீழ் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில்,

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது நிதியமைச்சர்பேசுகையில், சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கான ஊதிய உயர்வை அறிவித்தார்.

செப்டம்பர் 15ம் தேதி முதல் இது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டாலும் நிதி நிலைமை அதற்கு இடம் கொடுக்காதகாரணத்தால் அதைத் தர முடியவில்லை.

ஆனால் எனது அரசின் முனைப்பான பல்வேறு நடவடிக்கைகளால் தற்போது நிதி நிலைமை ஓரளவு சீர்பட்டு, முன்னேற்றப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. எனவே இந்த ஊதிய உயர்வை தற்போது அமல்படுத்த முடிவு செய்துள்ளேன்.

அதன்படி எம்எல்ஏக்களின் வீட்டு வாடகைப்படி ரூ. 3,500லிருந்து ரூ. 4000 ஆகவும், தொலைபேசிப்படி ரூ. 2,750ல் இருந்து ரூ.4,000 ஆகவும், தொகுதிப்படி ரூ. 875ல் இருந்து ரூ. 2000 ஆகவும், தபால்படி ரூ. 875லிருந்து ரூ. 1500 ஆகவும்உயர்த்தப்படுகிறது.

மேலும் எம்எல்ஏக்களின் ஒட்டு மொத்த ஊதியம் ரூ. 12,000லிருந்து ரூ. 16,000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

உறுப்பினர்கள் சட்டசபைக் கூட்டங்கள், குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும்போது வழங்கப்படும் தினப்படி ரூ. 250லிருந்துரூ. 400 ஆகவும், உறுப்பினராக இருந்து இறப்போரின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் குடும்பப்படி ரூ. 500லிருந்து ரூ. 1000ஆகவும், முன்னாள் உறுப்பினர்களின் மருத்துவப்படி ரூ. 2,000லிருந்து ரூ. 3,000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

சட்டசபை துணைத் தலைவர், எதிர்க்கட்சித் தலைவர், அரசு தலைமைக் கொறடா ஆகியோருடைய ஊதியம் ரூ. 9,500லிருந்து ரூ.17,500 ஆகவும், சபாநாயகர், அமைச்சர்கள் ஆகியோருடைய ஊதியம் ரூ. 10,000லிருந்து ரூ. 18,000ம் ஆகவும் உயர்த்திஉத்தரவிட்டுள்ளேன்.

இந்த ஊதிய உயர்வு 2001ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி முதல் அமல்படுத்தப்படும்.

இதேபோல முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் உயர்த்தியுள்ளேன். 1 ஆண்டு உறுப்பினராக பணியாற்றியவர்களுக்குரூ. 5,000லிருந்து ரூ. 6,000 ஆக ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இது இந்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது என்றார்ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+