கரைவேட்டியால் கட்டாயக் காத்திருப்பு: அரசுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரி வழக்கு
சென்னை:
கட்டாயக் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து தமிழ்நாடு வேர்ஹவுசிங் கழக நிர்வாக இயக்குனர் பதவியிலிருந்துமாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி, மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கமிஷன் மன்னரான விநாயகமூர்த்தியின் பல கோரிக்கைகளை காந்தி ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இந் நிலையில், கடந்த ஆண்டுடிசம்பர் மாதம் பதவியிலிருந்து காந்தி தூக்கப்பட்டார்.
ஆனால், அவருக்கு புதிய பொறுப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை. மாறாக காத்திருப்போர் பட்டியலில் அவர் வைக்கப்பட்டார்.
தற்போது தனக்கு மீண்டும் பதவி வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரி கிறிஸ்துதாஸ் காந்தி சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில்வழக்குத் தொடர்ந்துள்ளர். அதில், விநாயகமூர்த்தியின் நியமனத்திற்குப் பிறகு அவருக்கு சாதகமாக செயல்பட (விநாயகமூர்த்தி பணம்சுருட்ட) நான் நிர்பந்திக்கப்பட்டேன். அவரது கோரிக்கைகளை நான் ஏற்க மறுத்ததால், அவர் கோபமடைந்தார்.
எனது பொறுப்பில் இருந்த 20 கோப்புகள் எனது உத்தரவில்லாமல் விநாயகமூர்த்தியின் பொறுப்புக்கு மாற்றப்பட்டன. மேலும், மத்தியஅரசுக்குச் சொந்தமான மத்திய வேர்ஹவுசிங் கழகத்துடன் ரூ. 2.3 கோடி அளவிலான டெண்டரில் கையெழுத்திடுமாறும் அவர் என்னைநிர்பந்தித்தார்.
அந்த டெண்டரை தானே எடுத்து பணம் பார்க்க நினைத்தார். அதற்காக அவர் என்னை கட்டாயப்படுத்தினார்.
இச் சூழ்நிலையில் விநாயகமூர்த்தியின் அறிவுறுத்தலின்பேரில்தான் என்னை இடமாற்றம் செய்தார்கள். இருப்பினும் புதிய பொறுப்புஎதையும் கொடுக்காமல் கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில் தமிழக அரசு வைத்துள்ளது.
எனக்கு பழைய பொறுப்பு அல்லது புதிய பணியை உடனடியாக வழங்க அரசுக்கு தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும் என்று காந்தி தனதுமனுவில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் கரைவேட்டிகளிடம் சிக்கிக் கொண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் படாதபாடு பட்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications