ஒன்றரை வருடமாக 3 பேரால் கற்பழிக்கப்பட்ட கோவை பெண்!!

Subscribe to Oneindia Tamil

கோவை:

நிர்வாணப் படம் எடுத்து வைத்திருப்பதாக கூறி இளம் பெண்ணை மிரட்டி, கட்டாயப்படுத்தி ஒன்றரை வருடங்களாக 3 பேர் கற்பழித்துவந்ததுள்ளனர்.

இது குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி.யிடம் சம்பந்தப்பட்ட பெண் இப்போது புகார் கொடுத்துள்ளார்.

கேரள மாநிலம் குருவாயூரைச் சேர்ந்தவர் மீரா. இவர் கோவை இடையர்பாளையம் தடாகம் சாலையில் தனது கணவர் செல்வக்குமார்,மகன் கிருஷ்ணராஜ் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

மேற்கு மண்டல ஐ.ஜி. சுப்ரமணியத்திடம் சமீபத்தில் மீரா ஒரு பரபரப்புப் புகாரைக் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது கணவருடன் பூசாரிப்பாளையம் அருகே உள்ள பனைமரத்தூரில் வசித்து வந்தேன். கணவரின் அண்ணன் குடும்பமும்எங்களுடன்தான் இருந்தது. அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தோம்.

எனது மகன் கிருஷ்ணராஜ் பூசாரிபாளையத்தில் உள்ள பள்ளியில் சேர்த்தோதம். நானே தினசரி சென்று அவனை விட்டு விட்டு அழைத்துவருவேன். அந்த சமயத்தில் செல்வி என்ற பெண் எங்களுக்கு அறிமுகமானார். அவரது பேச்சில் கவரப்பட்ட நான் அவருடன் நெருங்கிப்பழகத் தொடங்கினேன்.

எனது கணவரின் அண்ணன் மனைவியும் செல்வியுடன் பழகத் தொடங்கினார். ஒரு நாள் சினிமாவுக்குப் போய் வரலாம் என்று கூறி செல்விஎங்களை அழைத்தார். இதைத் தொடர்ந்து 3 பேரும் காந்திபுரம் சென்று படம் பார்த்தோம். படம் முடிந்த பிறகு, பூசாரிப்பாளையம்திரும்பினோம். அப்போது அங்குள்ள ஒரு முக்கியப் பிரமுகரைப் பார்த்து விட்டு வரலாம் என்று என்னை இருவரும் அழைத்தனர்.

ஆனால் நான் மறுத்து விட்டு எனது வீட்டுக்குப் போய் விட்டேன். அவர்கள் மட்டும் சென்றனர்.

அடுத்த நாள் என்னையும் கட்டாயப்படுத்தி அங்கு அழைத்துச் சென்றனர். 3 பேருக்கும் குளிர்பானம் கொடுத்தார்கள். அதைக் குடித்தவுடன்,எனக்கு மயக்கம் வந்து விட்டது. அதன் பிறகு சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்துத்தான் கண் விழித்தேன். அப்போது எனது உடலில் ஒட்டுத்துணி கூட இல்லை. நிர்வாணமாக கிடந்தேன்.

என்னை அங்கிருந்த 3 முக்கியப் பிரமுகர்களும், கற்பழித்துவிட்டதை அறிந்து திடுக்கிட்டேன். மயக்கமாகக் கிடந்த ஒன்றை மணி நேரமாகஇவர்கள் என்னைக் கற்பழித்துள்ளனர்.

அதன் பின்னர், இந்த சம்பவத்தை வெளியில் சொன்னால் நடப்பதே வேறு. உன்னை நிர்வாண நிலையில் புகைப்படம் எடுத்துள்ளோம்.எனவே நாங்கள் கூப்பிடும்போதெல்லாம் வர வேண்டும் என்று கூறி மிரட்டினர். வராவிட்டால் கேசட்டாக போட்டு விற்போம், போஸ்டர்அடித்து ஒட்டுவோம்.

உனது கணவரின் அண்ணன் மனைவியும் இதேபோலத்தான் எங்களிடம் மாட்டிக் கொண்டார். அவரால் என்ன செய்ய முடிந்தது?. எனவேஇதை இங்கேயே மறந்து விட்டு, நாங்கள் கூப்பிடும்போதெல்லாம் வா என்று கூறி என்னை அனுப்பினர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை என்னைக் கூப்பிட்டு இன்பம் அனுபவிக்கத் தொடங்கினார்கள்.வராவிட்டால் தொலைபேசியில் மிரட்டுவார்கள். இதற்குப் பயந்தே நானும் போகத் தொடங்கினேன்.

கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் இப்படி மிரட்டியே என்னை 3 பேரும் கற்பழித்து வந்தார்கள். அவர்கள் வீட்டுக்கு நான் போனதும்,வாயில் துணியை வைத்து விட்டு கையைப் பிடித்துக் கொண்டு 3 பேரும் மாறி மாறிக் கற்பழிப்பார்கள்.

இந் நிலையில் இந்த விவகாரம் எனது கணவருக்குத் தெரியவந்தது. அவர் என்னை கோபமாகத் திட்டி அடித்தார். இதைத் தொடர்ந்துகோவை பூ மார்க்கெட் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம்.

அதன் பின்னர் தடாகம் சாலைக்கு வீட்டை மாற்றிக் கொண்டு வந்து விட்டோம். இருந்தும் தற்போதும் அந்த 3 பேரும் தொலைபேசியில்எங்களை மிரட்டுகிறார்கள். எனவேதான் ஐ.ஜியிடம் புகார் கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார் மீரா.

இதே கோவையில்தான் கடந்த ஆண்டு,சித்ரா என்பவரை கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மயக்க மருந்து கொடுத்து கற்பழித்தசம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தொழிலதிபருக்கு சமீபத்தில் கோவை நீதிமன்றம் 10 வருடம் சிறைத் தண்டனையும்விதித்தது.

இந் நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம் கோவையில் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகார் கொடுத்துள்ள மீராதற்போது 6 மாத கர்ப்பிணி என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+