பாப்பாபட்டி: தலித் வேட்பாளர் மர்மச் சாவு
மதுரை:
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த விடுதலைச் சிறுத்தைகள்வேட்பாளர் நரசிங்கம் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார்.
இந்தப் பதவிகள் தலித்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால், அவர்களை போட்டியிட விடாமல் ஆதிக்க சாதியினர் தடுத்து வருகின்றனர்.போட்டியிட்டு வென்றாலும் பதவியேற்க விடுவதில்லை.
இந் நிலையில் வரும் 19ம் தேதி இந்த ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பாப்பாபட்டியில் விடுதலைச் சிறுத்தைகள்சார்பில் நரசிங்கம் என்ற தலித் வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.
போட்டிக்கு ஊர் மக்கள் சார்பில் என்ற பெயரில் பெரிய கருப்பன் என்பவர் வேட்பு மனுதாக்கல் செய்தார். அவருக்கு பாதுகாப்புக்கு ஒருபோலீஸ்காரரும் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில், இன்று காலை நரசிங்கம் கிணற்றில் குளிக்கச் சென்றார். பாதுகாப்புக்கு இருந்த போலீஸ்காரர் பக்கத்து கிணற்றில் குளிக்கச்சென்றார்.
குளித்துவிட்டு வீடு திரும்பிய நரசிங்கம் ரத்த வாந்தி எடுத்துள்ளார். சிறிது நேரத்தில் இறந்தார்.
அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
அவர் மாற்று சாதியினரால் கொல்லப்பட்டதாக தலித்கள் கூறுகின்றனர். நரசிங்கத்தின் மர்மச் சாவால் அப்பகுதியில் பெரும் பதற்றம்நிலவுகிறது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளன் கூறுகையில், நரசிங்கத்தின் சாவில் மர்மம் உள்ளது. அவர் மாரடைப்பு ஏற்பட்டுஇறந்து விட்டதாக கூறுகிறார்கள். ஆனால் நிச்சயம் அவர் அப்படி இறந்திருக்க மாட்டார். இந்தச் சாவை மாரடைப்பு என்று சொல்லி மூடிமறைக்க அதிகார வர்க்கம் முயல்கிறது.
இந்த சாவு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அப்போதுதான் உண்மை தெரிய வரும் என்றார்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் மீண்டும் தேர்தல் நாடகம்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications