முன்னாள் நக்சலைட்டுகளின் புதிய அமைப்பு

Subscribe to Oneindia Tamil

ஓசூர்:

முன்னாள் நக்சலைட்டுகள் இணைந்து புதிய அமைப்பு ஒன்றைத் தொடங்கியுள்ளனர். தங்களது மறுவாழ்வுக்கு தமிழக அரசு உதவி செய்யவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

நக்சலைட்டுகளின் சாம்ராஜ்யமாக ஒரு காலத்தில் திகழ்ந்தது தர்மபுரி மாவட்டம். தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இடைவிடாதமுயற்சியின் காரணமாக தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

இந் நிலையில் நக்சலைட்டுகளாக இருந்து பின்னர் மனம் மாறிய 300 பேர் சேர்ந்து "முன்னாள் நக்சல்பாரிகள் மறுவாழ்வுபேரவை என்றபுதிய அமைப்பைத் தொடங்கியுள்ளனர். சாதாரண குடிமக்களைப் போல திருந்திய வாழ்வு வாழ தங்களை தமிழக அரசும், காவல்துறையும்,சமூகமும் அனுமதிக்க வேண்டும், அதற்காக உதவ வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்தில் ஓசூரில் இந்த அமைப்பினரின் முதல் கூட்டம் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கிடையே நடந்தது. அமைப்பின் தலைவராக மரவாடிகிராமத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் கடந்த 1979ம் ஆண்டு முதல் 86 வரை கூலி விவசாயிகள் சங்கம், புரட்சிகர இளைஞர் லீக் ஆகிய அமைப்புகளில் சேர்ந்து தீவிரநக்சலைட்டாக விளங்கியவர். இவர் மீது 5 வழக்குகளும் போடப்பட்டன.

கூட்டத்திற்குப் பின்னர் இளங்கோவன் கூறுகையில், நக்சல்பாரி கொள்கைகளில் எங்களுக்கு இன்னமும் உடன்பாடு உள்ளது. இருப்பினும்இப்போது நாங்கள் அந்தப் பாதையிலிருந்து விலகி வந்து விட்டோம். மற்ற மக்களைப் போல இயல்பான வாழ்க்கை வாழஆசைப்படுகிறோம்.

ஆனால் அதற்கு பல முட்டுக் கட்டைகள் உள்ளன. போலீஸாரின் நடவக்கையால் எங்களில் பலர் உடல் ஊனமுற்றவர்களாக உள்ளனர். பலர்மீது இன்னும் வழக்குகள் நடந்து கொண்டுள்ளன. எங்களது பிள்ளைகளை, நக்சல் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற கண் கொண்டு சமூகம்பார்க்கிறது.

எங்களுக்கு வேலை தர யாரும் முன் வருவதில்லை. அரசின் சலுகைகளும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. இதனால் சுய தொழில்செய்யவும் இயலாத நிலையில் உள்ளோம்.

எங்களது மிச்சமுள்ள காலத்தையும் அமைதியான வழியில் கழிக்க ஆசைப்படுகிறோம். அதற்கு அரசு உதவ வேண்டும். எங்களதுகோரிக்கைகளைக் கூறும் முகமாகவே இந்த பேரவையைத் தொடங்கியுள்ளோம்.

எனது மகள் கலைமணி ஓசூரில் உள்ள தனியார் கல்லூயில் பி.எஸ்.சி படிக்கிறார். ஆனால் அவரால் இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வை எழுதமுடியவில்லை. காரணம் பரீட்சைக்குக் கட்ட வேண்டிய 500 ரூபாயை கட்ட முடியவில்லை.

ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த எனது மகளுக்கு அதுதொடர்பான எந்த சலுகையும், படிப்புக் கட்டண உதவியும் வழங்கப்படவில்லை,மறுக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டத்தில் நக்சலைட்டுகளை சீர்திருத்துவதற்காக ரூ. 6 கோடி செலவில் சமூக, பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தை தமிழகஅரசு அமல்படுத்தி வருகிறது. ஆனால் இந்த திட்டத்தால் மனம் திருந்திய எந்த நக்சலைட் குடும்பமும் பயன்பெறவில்லை என்பதுதான்உண்மை.

விளையாட்டுக் கூடங்களைத் திறப்பதும், நூலகங்களைத் திறப்பதும் மட்டும் நக்சலைட்டுகளை ஒழித்து விட உதவாது. அவர்களதுவாழ்க்கைக்குத் தேவையான வழிகளை அரசு திறந்து விட வேண்டும்.

முன்னாள் நக்சலைட்டுகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். எங்களது வாழ்க்கைக்குத் தேவையான உதவிகளை அரசு செய்யவேண்டும். எங்களது நலனுக்காக, இப்பகுதியில், கூட்டுறவு பால் பண்ணை,

மினரல் வாட்டர் தயாரிக்கும் ஆலையை நிறுவ வேண்டும் என்று அரசுக்கு நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். இவற்றை பேக்ஸ் மூலம்முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்றார் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+