சினிமா பெயர்: இனி போராட்டம் இல்லை- திருந்தினால் திருந்தட்டும்: ராமதாஸ்
சென்னை:
திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைக்கக்கோரி போராட்டம் நடத்தி எங்கள் சக்தியை வீணடிக்க மாட்டோம் என்று டாக்டர் ராமதாஸ்கூறியுள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் மொழிப் போராட்டம் சினிமா படப் பிரச்சினையை விட பெரிய சாதனைகளை சந்திக்க வேண்டும் என்றுவிரும்புகிறோம். இதற்கு பத்திரிக்கைகள் உதவ வேண்டும். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல. குறிப்பாக ஆங்கிலத்திற்குஎதிரானவர்கள் அல்ல.
ஆங்கிலத்தை சிறப்பாக படிக்க வேண்டும் என்று தான் நாங்கள் கூறி வருகிறோம். நாங்கள் தெளிவாக கூறினால் கூட சில மேதாவிகள், இதுதமிழன் உருப்படுவதற்கான வழியல்ல என்று கூறுகின்றனர்.
தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் இருப்பவர்களிடம் பத்திரிக்கையாளர்கள் திரும்பத் திரும்ப சினிமா பெயர் பற்றித் தான் கேட்கிறார்கள். இதுஎங்களது சக்தியை திசை திருப்பும் பிரச்சினையாகும். படப் பிரச்சினை போன்ற சிறிய பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துஎங்களது மொழிப் போராட்டத்தை சிறுமைப்படுத்த வேண்டாம்.
சினிமா பட பெயரை தமிழில் வையுங்கள் என்று கோரிக்கை விடுப்பதுடன் நிறுத்திக் கொள்வோம். அதற்காக வன்முறையில் ஈடுபடும்உத்சேம் இல்லை. சொல்வதுடன் நிறுத்திக் கொள்வோம். திருந்தினால் திருந்தட்டும்.
சிறுசிறு பிரச்சினைகளுக்கு எல்லாம் போராட்டம் நடத்தி எங்களது சக்தியை வீணடிக்க மாட்டோம். மக்களுக்காக போராடவேண்டியதுஏராளம் உள்ளது. புலி வேட்டைக்கு புறப்பட்ட நாங்கள் எலி வேட்டைக்கு இறங்கமாட்டோம்.
சினிமா பட பிரச்சினை போன்ற சிறிய பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்கள் மொழிப் போராட்டத்தை சிறுமைப்படுத்தவேண்டாம்.
நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்லர். 3வது மொழிப் போரை அறிவித்துள்ளோம். அது ஆங்கிலத்திற்கு எதிரான போர் அல்ல.ஆங்கிலத்தை நன்றாகப் படியுங்கள் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்.
ஆனால், ஆங்கிலம் படிக்கவில்லை என்றால் வெளிநாட்டில் வேலை கிடைக்காது என்று சிலர் திசை திருப்புகின்றனர். இந்த மேதாவிகள்தமிழுக்கு எதிரான விஷம் கக்குபவர்கள். தமிழ் வளர்ச்சிக்கான உருப்படியான யோசனைகளை எதுவும் இதுவரை கூறியது கிடையாது.
அமெக்காவைப் பொருத்தவரை சீனர்கள்தான் அதிக அளவில் வேலை பார்க்கிறார்கள். இரண்டாவது இடம்தான் இந்தியர்களுக்கு.இதிலிருந்து என்ன தெரிகிறது? ஆங்கிலம் தெரிந்தால்தான் வெளிநாட்டு வேலை என்றவாதம் வெற்று வாதம் என்று புரியும். சீனர்களுக்குநம்மை விடவா ஆங்கிலம் தெரியும்? சீனர்களை விட இந்தியர்களுக்கே ஆங்கில அறிவு அதிகம் என்கிறார்கள்.
2வது இடத்தில் தான் இந்தியர்கள் உள்ளனர். அதிலும் ஆந்திரா, கர்நாடகா, குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான் அதிகம். குதர்க்கம்பேசும் இவர்கள் இந்தக் காலத்திலும் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
எம்.எல்.ஏக்களுக்கு 45 மாதம் முன் தேதியிட்டு சம்பளத்தை அதிகப்படுத்தி கொடுக்கப் போவதாக அறிவித்தள்ளார்கள். இப்படிக் கொடுக்கவேண்டாம். அதற்குப் பதிலாக, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு இவற்றைகொடுக்கலாம். ஏழை பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தை மீண்டும் தொடங்கி நிதியுதவி அளிக்கலாம்.
கிருஷ்ணா நீர்ப் பிரச்சினைக்காக நீதிமன்றம் செல்வதால் பயன் இருக்காது. ஏற்கனவே காவிரி விஷயத்தில் நீதிமன்றம் போயும் ஒன்றும்நடக்கவில்லை. அதேசமயம், காவிரி நமது உரிமை, வழக்கு போட்டதில் தவறில்லை. ஆனால் கிருஷ்ணா நீர் உதவிதான், உரிமை அல்ல.எனவே வழக்குப் போடுவதால் நியாயம் கிடைக்காது.
சட்டசபைத் தேர்தலை எப்போது நடத்தினாலும், அடுத்த மாதமே நடத்தினாலும் நாங்கள் சந்திக்கத் தயாராக உள்ளோம். டிசம்பரில் வரும்என்று அமைச்சர்களே சட்டசபையில் பேசி வருகிறார்கள் என்றார் ராமதாஸ்.
சினிமாப் படப் பெயர் மாற்றம் குறித்த தனது நிலையிலிருந்து ராமதாஸ் மாறியிருப்பது புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications