விருதுநகர்: பஸ்-வேன் மோதலில் 9 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

விருதுநகர்:

விருதுநகர் அருகே அரசு பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 9 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர்.

இன்று காலை அந்த பஸ் மதுரையில் இருந்து கோவில்பட்டிக்கு சென்று கொண்டிருந்தது. அந்த வேன் கன்னியாகுமரியில் இருந்துவந்து கொண்டிருந்தது.

விருதுநகர் அருகே உள்ள துலுக்கப்பட்டியைத் தாண்டி பட்டாம்புதூர் விலக்கு பகுதியில் இந்த பஸ்சும் வேனும் பயங்கர வேகத்தில்நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

இதில் வேனில் இருந்த 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர்.

விபத்துக்குள்ளான வேன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தது. அதில் இருந்தவர்கள் கர்நாடகத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள்என்று தெரிகிறது.

இந்த விபத்தில் வேன் உருக்குலைந்து போனது. இதில் வேனில் இருந்த 9 பேரும் உடல் நசுங்கி பலியாகிவிட்டனர். மேலும் 10பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் பலியான கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களின் ஊர், பெயர் விவரம் உடனடியாகத் தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+