கனிஷ்கா: பொது விசாரணைக்கு கனடா உத்தரவு
Subscribe to Oneindia Tamil
ஒட்டாவோ:
கனிஷ்கா விமானம் குண்டு வைத்து தகர்க்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொது விசாரணை நடத்த கனடா பாராளுமன்றம்உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ரிபுட்மன் சிங் மாலிக் மற்றும் அஜைப் சிங் பக்ரி ஆகிய 2 சீக்கியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள்மீது டொரன்டோ நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
கடந்த 10 வருடங்களாக நடைபெற்ற வந்த இந்த வழக்கில் கடந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்டஇருவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த தீர்ப்பால் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக பொதுவிசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந் நிலையில் கனிஷ்கா விமான தகர்ப்பு சம்பவம் தொடர்பாக பொது விசாரணை நடத்த கனடா பாராளுமன்றம்உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications