அரவாணிகளை தாக்கிய போலீஸார்: தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்
சென்னை:
சென்னையில் அரவாணிகளைத் தாக்கிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கூறி உள்துறைச் செயலாளர், சென்னை மாநகர காவல்துறைஆணையாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட அடையாளம் தெரியாத பிணம் குறித்து இவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தியதாகத்தெரிகிறது. விசாரணையின்போது 6 அரவாணிகளும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். இதில் அவர்களது கை, கால்கள்,தொடை, பின்புறம் ஆகியவற்றில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதில் பானு என்ற அரவாணிக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ஆண் குறி அகற்றும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.அதைக் கூறியும் போலீஸார் கொடூரமாகத் தாக்கியதால் அவர் படுகாயமடைந்துள்ளார்.
போலீஸாரின் இந்த கொடூரத் தாக்குதல் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரவாணிகள் வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதில்,விசாரணை என்ற பெயரில் போலீஸார் மிருகத்தனமாக நடந்து கொண்டனர். எங்களது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும், உடல்பாகங்கள் குறித்தும் மிகவும் அருவறுப்பான கேள்விகளைக் கேட்டனர்.
எங்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தி, சித்திரவதை செய்தனர். போலீஸாரின் கொடூரத் தாக்குதல் காரணமாகஎங்களில் பலரால் உட்காரக் கூட முடியாத அளவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பலரால் நடக்கக் கூட முடியவில்லை.
நாங்கள் யாரையும் கொலை செய்யவில்லை. அடையாளம் தெரியாத பிணத்துக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தம் கிடையாது.இதை நாங்கள் பலமுறை போலீஸாரிடம் கூறியும் அவர்கள் எங்களை விடவில்லை.
போலீஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்துள்ள பானு மற்றும் முத்துவேலுக்கு தலா ரூ. 2லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.மற்ற 4 பேருக்கும் தலா ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடு வழங்க காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும். அதற்கு முன்பாக இடைக்காலநிவாரணமாக அனைவருக்கும் தலா ரூ. 25,000 வழங்க உத்தரவிட வேண்டும்.
எங்களிடமிருந்த புகைப்பட ஆல்பம் ஒன்றையும் போலீஸார் பறிமுதல் செய்து கொண்டு சென்றுள்ளனர். அதை வைத்து பின்னர்அவர்கள் எங்களை மிரட்டலாம். எனவே அந்த ஆல்பத்தையும் திரும்பப் பெற்றுத் தர வேண்டும் என்று அரவாணிகள் தங்களதுமனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனுவை விசாத்த நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியன் இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கூறி உள்துறைச் செயலாளர், மாநகரகாவல்துறை ஆணையர், உதவி ஆணையாளர், புளியந்தோப்பு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications