கோத்ரா: கே.ஆர்.நாராயணனுக்கு நோட்டீஸ்
அகமதாபாத்:
முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனுக்கு கோத்ரா ரயில் எரிப்பு குறித்து விசாரிக்கும் கமிஷன் நோட்டீஸ்அனுப்பியுள்ளது.
சமீபத்தில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன், கோத்ரா ரயில் எரிப்புசம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தை தடுக்க மத்தியில் ஆண்ட பாஜக அரசு தவறி விட்டதாக கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து கே.ஆர் .நாராயணனை குறுக்கு விசாரணை செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் முகுல் சின்ஹா, கோத்ராகமிஷனிடம் கோரிக்கை வைத்தார்.
இந் நிலையில், கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் குறித்து விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதிகளான ஜி.டி.நானாவதி மற்றும்கே.ஜி.ஷா ஆகியோர் அடங்கிய கமிஷன், முன்னாள் குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணனக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பிஉள்ளது.
அதில், கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தை அடக்க அப்போது ஆட்சியில் இருந்தபாஜக அரசு தவறியதாக பத்திரிகைகளில் பேட்டி அளித்தது குறித்து விளக்கம் அளிக்க வர முடியுமா என்று கேட்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டீஸை கே.ஆர்.நாராயணன் பெற்றுக் கொண்டதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாககே.ஆர்.நாராயணனுக்கு சம்மன் அனுப்பலாமா என்பது குறித்து மே மாதம் 4ம் தேதி கோத்ரா கமிஷன் நீதிபதிகள் முடிவுசெய்வார்கள்.
ஒரு விசாரணைக் கமிஷன் முன், முன்னாள் ஜனாதிபதி ஒருவரை ஆஜராவதற்கு நோட்டீஸ் அனுப்புவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications