சங்கரராமன் வழக்கு: செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கு செங்கல்பட்டு செசன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் வழக்கின் விசாரணை இனிஅங்கு தான் நடக்கும்.
இந்த வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முழு வேகம் பிடித்துள்ளது. அடுத்ததாக சாட்சிகள்விசாரணை, குறுக்கு விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
இந் நிலையில் இந்த வழக்கு விசாரணையை செங்கல்பட்டு நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிபதி உத்தமராஜன் இன்று உத்தரவிட்டார்.அங்கு வரும் 27ம் தேதி முதல் விசாரணை தொடங்கும் என்று அறிவித்தார்.
அந்த தினத்தில் அப்ரூவரான ரவி சுப்பிரமணியம் உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் செங்கல்பட்டு நீதிமன்றத்தில்ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications