சிங்கத் தலைவி ஜெயலலிதா: பொன்னையன் ஜிங் சக்
சென்னை:
கூட்டுறவு வங்கிகளில் பணத்தை சீரழித்த திமுகவினரை சிங்க நிகர் தலைவி தப்ப விட மாட்டார் என்று நிதியமைச்சர்பொன்னையன் கூறியுள்ளார்.
முதல்வர் பொறுப்பை ஏற்ற நாள் முதல், மக்கள் நலத் திட்டங்களை ஜெயலலிதா தீட்டினார். கடுமையாக உழைத்ததால் நிதி நிலைசீரடைந்தது. வணிக வரி வசூல் கடந்த திமுக ஆட்சியின்போது ரூ. 8,000 கோடியாக இருந்தது. அது இப்போது ரூ. 15,000கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கு முதல்வரின் அயராத உழைப்பே காரணம்.
திமுக ஆட்சியின்போது மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றவில்லை. நிதியை தாராளமாக செலவிட்டு அடுத்து வரும் ஆட்சிஎப்படியோ போகட்டும் என்ற எண்ணத்தில் செலவீனங்களை அதிகப்படுத்தினர். கஜானாவைக் காலி செய்து விட்டுத்தான்ஆட்சியை விட்டுச் சென்றார்கள்.
கூட்டுறவுத் துறையை சீரழித்ததும் திமுகதான். கூட்டுறவு வங்கியின் பணத்தை சீரழித்தவர்களை சிங்க நிகர் தலைவி தப்ப விடமாட்டார் என்று பேசினார் பொன்னையன்.












Click it and Unblock the Notifications