மதுரை சித்திரை திருவிழா தொடங்கியது

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில்இறங்கும் வைபவம் 24ம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா வருடந்தோறும் 12 நாட்கள் மிக விமரிசையாக நடத்தப்படும். இவ்வருடவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வருகிற 20ம் தேதி மாலை பட்டாபிஷேகமும், 22ம் தேதி காலை மீனாட்சி அம்மன்- சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும், மறுநாள்காலை தேரோட்டமும் நடைபெறும்.

திருக்கல்யாண நிகழ்ச்சியையொட்டி 12 நாட்களும் சுவாமி புறப்பாடு நடைபெறும்போது நாதஸ்வரக் கச்சேரியுடன் ஓதுவார்களின்திருமுறை பாராயணம், வேதபாராயணம் ஆகியவை நடைபெறும். திருக்கல்யாணத்தை தொடர்ந்து கோவிலில் விருந்துநடைபெறும்.

சித்திரை திருவிழாவில் மிக முக்கிய நிகழ்ச்சி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமாகும். இதற்காக அழகர் கோவிலில்இருந்து 22ம் தேதி மாலையில் கள்ளழகர் புறப்பாடாகி வருவார்.

24ம் தேதி காலை 7 மணி முதல் 7.15க்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவார். அன்று இரவு வண்டியூரில் தங்கிவிட்டுமறுநாள் மாலை வைகை ஆற்றுக்குள் மண்டூக முனிவருக்கு சாபவிமோசனம் வழங்குவார்.

அன்று இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடைபெறும். 26ம் தேதி தல்லாகுளம் மைசூர் ராஜா மண்டபத்தில் புஷ்பபல்லக்கு அலங்காரம் நடைபெறும். மறுநாள் 27ம் தேதி கள்ளழகர் அழகர் கோவில் சென்று சேர்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+