வெள்ளைக்கார அன்புமணி: ஜெ. கிண்டல்
சென்னை:
தமிழ், தமிழ் என்று முழங்கும் பாமகவினர் முதலில் அவர்களது தலைவரின் மகன் அன்புமணியிடம், கோட் சூட்டை விட்டு விட்டுவேட்டி கட்டச் சொல்ல வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் நிதி ஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழகத்தில்தான் தாய்மொழிக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் மற்ற மாநிலங்களில் தாய் மொழிக்கு அதிக முக்கியத்துவம்கொடுக்கிறார்கள் என்றார்.
ஜி.கே.மணியும், அவரது கட்சித் தலைவரும், ஏதோ தாங்கள்தான் தமிழ்க் குடி தாங்கிகள் போலவும், தாங்கள்தான் தமிழைவளர்த்து வருவது போலவும் காட்டிக் கொள்கிறார்கள்.
எதிர்காலத்தில் அவர்களுடைய கட்சியை நடத்தப் போகும் அவர்களுடைய சின்ன அய்யா, வெள்ளைக்காரர் உடையை மாற்றி,தமிழர் உடையான வேட்டி, சட்டையை முதலில் அணியட்டும். ஆங்கிலத்திற்குப் பதில் தமிழில் பேசட்டும். அதன் பிறகு ஊருக்குஉபதேசம் சொல்லட்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்ட ஜி.கே.மணி, எங்களது சின்ன அய்யா, தமிழ்நாட்டுக்கு வரும்போது வேட்டி, சட்டையில்தான் வருகிறார்.வெளிநாடு போகும்போது பேண்ட் சட்டை அணிகிறார் என்றார்.
அப்போது எழுந்த ஜெயலலிதா, மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர், ஆங்கிலப் புலமைமிக்கவர். அவரே, டெல்லி முதல் தமிழ்நாடு வரை எங்குமே வேட்டி சட்டையில்தான் செல்கிறார். உங்கள் சின்னத் தலைவர் வேட்டிகட்டாதது ஏன்? முதலில் அவரை வேட்டி சட்டை போட்டு தமிழில் பேசச் சொல்லுங்கள்.
அண்ணா கோட், சூட் அணிந்தார் என்று கூறுவதை ஏற்க முடியாது. அவர் இந்தியாவில், தமிழ்நாட்டில் கோட் சூட்அணிந்ததில்லை. உங்களது கட்சியின் சின்னத் தலைவரோ எங்கு போனாலும் கோட் சூட்டில்தான் போகிறார், ஆங்கிலத்தில்தான்பேசுகிறார். அவரை முதலில் தமிழனாக மாறச் சொல்லுங்கள், தமிழில் பேசச் சொல்லுங்கள் என்றார் ஜெயலலிதா.
பாவாணருக்கு நினைவுச் சின்னம்:
பாமக உறுப்பினர் முருகவேல் ராஜன் பேசுகையில், தேவநேயப் பாவாணருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று முன்பேஅறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் அமைக்கவில்லை. அவரது இல்லத்தை நினைவிடமாக அறிவிக்க வேண்டும்.
அதேபோல, வீரன் சுந்தரலிங்கத்திற்கும் நினைவிடம் அமைக்க வேண்டும். அவன் வாழ்ந்த கவனகிரியில் நினைவிடம் அமைக்கவேண்டும் என்றார்.
இக் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.












Click it and Unblock the Notifications