• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸ் வெறி ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட்:புரோக்கர் கைது

By Staff
|

சென்னை:

சிறுமிகள் செக்ஸ் விவகாரத்தில் சிக்கிய கஸ்டம்ஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு சிறுமிகள்,பெண்களை ஏற்பாடு செய்து தந்த புரோக்கர் கிட்டுவை போலீஸார் இன்று கைது செய்தனர்.

இவரால் பாதிக்கப்பட்ட 20 சிறுமிகள் தவிர 20க்கும் மேற்பட்ட பெண்களும், ராதாகிருஷ்ணனுக்கு எதிராக போலீஸில் வாக்குமூலம்கொடுத்துள்ளனர்.

ஏழை சிறுமிகளை தத்தெடுத்து வளர்ப்பதாக கூறி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக சென்னை கஸ்டம்ஸ் அதிகாரிராதாகிருஷ்ணன் கடந்த சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

3 நாட்களாக அவரிடம் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்றது. முதல் நாள் விசாரணையிலேயே ராதாகிருஷ்ணன் தனது செக்ஸ்லீலைகளை ஒப்புக்கொண்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் முன்னிலையிலும் ராதாகிருஷ்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிறுமிகள் கூறிய குற்றச்சாட்டை மறுக்கமுடியாமல் ராதாகிருஷ்ணன் பலமுறை கதறி அழுதார். சிறுமிகளின் வாக்குமூலத்தை போலீஸார் பதிவு செய்துவிட்டு அவர்களைஅவர்களது ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

இதுவரை பாதிக்கப்பட்ட 20 சிறுமிகள் மற்றும் 20 இளம்பெண்களும் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

நேற்று, ராதாகிருஷ்ணனுக்கு புரோக்கர்களாக செயல்பட்ட கிட்டு, பன்னீரம்மா ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதில்இருவரும் கூறிய தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருந்தததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

பாலியல் பலாத்காரத்துக்கு பணிய மறுக்கும் சிறுமிகளுக்கு பாலில் மயக்க மருந்து கலந்துகொடுத்து ராதாகிருஷ்ணன் கற்பழிப்பார் என்றும்,தான் கொண்டு வரும் ஒவ்வொரு சிறுமிக்கும் ஆயிரக்கணக்கில் தனக்கு அவர் பணம் கொடுத்தார் என்றும் கிட்டு போலீஸாரிடம்கூறியுள்ளான்.

இந்த தகவல்களின் அடிப்படையில் இன்று கிட்டுவை போலீஸார் கைது செய்தனர்.

வயாக்ரா:

சிறுமிகளிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள ராதாகிருஷ்ணன், "வயாக்ரா மாத்திரைகள் மற்றும் செக்ஸ் உணர்ச்சியை தூண்டும் இறக்குமதிசெய்யப்பட்ட வாசனை திரவியம் ஆகியவற்றை உபயோகித்துள்ளார்.

சில சமயங்களில் போதை ஊசி போட்டும் உல்லாசம் அனுபவிப்பாராம். தனது காமப்பசியை தீர்த்துக் கொள்ள சிறுமிகளுக்கும் போதைஊசி மற்றும் மாத்திரைகளை கொடுத்துள்ளார்.

வாங்கிக் குவித்த சொத்துக்கள்:

சிறுமிகளை தனது இச்சைக்கு மட்டும் பயன்படுத்தாமல் அவர்களை முக்கிய பிரமுகர்களுக்கு விபசாரத்திற்கு விட்டும் ராதாகிருஷ்ணம்லட்சக்கணக்கில் சம்பாதித்துள்ளார். இந்தப் பணத்தை வைத்து இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.

கூடுவாஞ்சேரியில் பல ஏக்கர்களில் நிலம் வாங்கிப் போட்டுள்ளார். வாணியம்பாடி சங்கிலிக்குப்பம் மற்றும் ஆந்திர மாநிலம் நெல்லூர்அருகே தலா ஒரு பண்ணை வீடு, சென்னை சூளைமேட்டில் அடுக்கு மாடி வீடு மற்றும் நெல்லூர் அருகே பல ஏக்கர் நிலம் ஆகியவற்றைராதாகிருஷ்ணன் வாங்கிக் குவித்துள்ளார்.

செக்ஸ் புகாரில் சிக்கியுள்ள ராதாகிருஷ்ணன் மீது வேறு சில கோணங்களிலும் போலீஸாருக்கு சந்தேகம் வந்துள்ளது. அவரது வீட்டில்நடத்திய சோதனையில் அவர், சில மர்ம நபர்களுடன் எடுத்துக் கொண்டு போட்டோக்கள் சிக்கியுள்ளன.

இது தவிர அவரது டைரியில் சில சங்கேத மொழியில் பெயர்களும், நம்பர்களும் எழுதப்பட்டுள்ளன. விசாரணையில் அவை இலங்கையைசேர்ந்தவர்களின் பெயர்கள் என்றும், அங்குள்ள டெலிபோன் எண்கள் என்றும் தெரியவந்துள்ளது.

ஊழல் தடுப்புப் பிரிவில் ஆரம்பத்தில் நன்றாகப் பணியாற்றி வந்தவர் ராதாகிருஷ்ணணன். ஒருமுறை ரூ. 20 கோடி கடத்தல் பொருட்களைஇவர் கண்டுபிடித்து மீட்டுள்ளார். இதற்காக அவருக்கு ரூ. 2 லட்சம் பரிசு கிடைத்ததாம்.

இப்படி இருந்து வந்த ராதாகிருஷ்ணன் தான் பின்னர் செக்ஸ் வக்கிரத்தில் நாட்டம் கொண்டார்.

இந் நிலையில், ராதாகிருஷ்ணன் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர் மீது, போலீஸார் பதிவு செய்துள்ளபுகார்களின் அடிப்படையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பணத்துடன் அலையும் தம்பி:

இதற்கிடையே, ராதாகிருஷ்ணனை எப்படியாவது ஜாமீனில் எடுத்து வெளியே கொண்டு வர வேண்டும் என்பதற்காக அவரது தம்பி ஒருவர்ரூ. 20 லட்சம் பணத்துடன் சென்னையில் முகாமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

ராதாகிருஷ்ணனின் காரியங்களுக்கு அவரும் துணை போயிருப்பார் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். எனவே அவரையும் பிடிக்கபோலீஸார் வலை வீசியுள்ளனர்.

ராதாகிருஷ்ணனின் செயல்களுக்கு உடந்தையாக இருந்தவர்களின் பட்டியலையும் போலீஸார் தயாரித்துள்ளனர். ராதாகிருஷ்ணனின்சொத்துக்கள் பலவற்றிற்கு பினாமியாக இருப்பவர் முருகப்பா. அடியாளாக செயல்பட்ட குட்டி என்ற தனசேகர் (இவர் ராதாகிருஷ்ணனின்சொந்தத் தம்பி ஆவார்), பண்ணையார் துரை, டிரைவர் கோபி (தங்கை மகன்) ஆகியோரை போலீஸார் தங்களது முதல் கட்ட பட்டியலில்கொண்டு வந்துள்ளனர்.

இவர்களில் கோபி, தனசேகர் ஆகிய இருவரைத் தவிர மற்றவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர். கோபியையும்,தனசேகரையும் போலீஸார் வலை வீசி தேடி வருகிறார்கள். அவர்கள் சிக்கினால் ராதாகிருஷ்ணன் குறித்த மேலும் பல்வேறு தகவல்கள்தெரிய வரும் என்று போலீஸார் எதிர்பார்க்கிறார்கள்.

இதற்கிடையே ராதாகிருஷ்ணனுடன் பணிபுரிந்த இன்னொரு அதிகாரியும் இவரது செக்ஸ் லீலைகளுக்கு உதவி புரிந்துள்ளார். அந்தஅதிகாரியின் மனைவியும் ராதாகிருஷ்ணனுடனும், அவரது கூட்டாளிகளுடனும் கொட்டம் அடித்துள்ளார். விரைவில் அந்த அதிகாரியும்போலீஸிடம் சிக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ராதாகிருஷ்ணனின் 3 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைவதால் அவரை இன்று மாலை எழும்பூர் நீதிமன்றத்தில்போலீஸார் ஆஜர்படுத்தவுள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X