3 வது அணிக்கு முயற்சிக்கவில்லை: டெல்லியில் ஜெ. பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் முதலமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஜெயலலிதா நேற்று மாலை டெல்லிசென்றார்.

நக்சலைட்டுகள் ஒழிப்பு, தீவிரவாதிடுகள் ஊடுறுவலைத் தடுப்பது, சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்துவிவாதிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலம முதலமைச்சர்கள் மாநாட்டை இன்று கூட்டியுள்ளது. இதை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைக்கிறார்.

இதில் பங்கேற்க நேற்று மாலை 5.45 மணிக்கு தனி விமானம் மூலம் ஜெயலலிதா டெல்லி சென்றார்.

டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தேசிய அளவில் மூன்றாவது அணியை தொடங்கும் திட்டம் ஏதும்என்னிடம் இல்லை. அதுதொடர்பான எந்த நடவடிக்கையிலும் நான் தற்போதைக்கு ஈடுபடவில்லை.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தை நான் சந்தித்து இதுதொடர்பாக பேசவுள்ளதாகவெளியாகியுள்ள செய்தியில் உண்மை இல்லை. அப்படி ஒரு திட்டமே என்னிடம் இல்லை. முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளமட்டுமே நான் வந்துள்ளேன். வேறு எதற்காகவும் வரவில்லை என்றார் ஜெயலலிதா.

மத்திய அமைச்சர்களும் பங்கேற்கும் இம் மாநாட்டில் தமிழகத்தில் போலீஸ் துறையை நவீனமாக்க கூடுதல் நிதியை முதல்வர் ஜெயலலிதாகோருவார் என்று தெரிகிறது. மேலும் இன்றைய கூட்டத்தில் வீரப்பனை சுட்டு வீழ்த்தியது உள்ளிட்ட தமிழக காவல்துறையின்நடவடிக்கைகள், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வரும் விதம் ஆகியவை குறித்து ஜெயலலிதா விரிவாகப் பேசுவார் என்றுதெரிகிறது.

பிரதமர் மன்மோகன் சிங்கையும் சந்திக்கவுள்ள ஜெயலலிதா இன்று மாலையே சென்னை திரும்புவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+