காஞ்சி, கும்மிடிப்பூண்டி: மே 14ல் இடைத் தேர்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதிகளுக்கு வரும் மே 14ம் தேதி இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.

இந்த அறிவிப்பை மத்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

காஞ்சிபுரம் அதிமுக எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு, கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. சுதர்சனம் ஆகியோரின் மறைவைத் தொடர்ந்து அந்தஇரு தொகுதிகளும் காலியாக உள்ளன.

இதையடுத்து இத் தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாரானது. ஆனால், சுனாமி பேரழிவைக் காரணம் காட்டிஇடைத் தேர்தலை ஒத்தி போட தமிழக அரசின் சார்பில் முயற்சி நடந்தது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபைத் தேர்லுக்கு முன், இந்த இடைத் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு எசகுபிசகாக அமைந்தால்நல்லதல்ல என நினைத்த தமிழக அரசு தேர்தலை ஒத்திப் போட முயன்றது.

ஆனால், எம்எல்ஏ மறைந்து 6 மாதத்துக்குள் புதிய உறுப்பினரைத் தேர்வு செய்தாக வேண்டிய அரசியல் சட்ட கடமை தேர்தல்ஆணையத்துக்கு உண்டு.

இருந்தாலும், சட்டசபையைக் கலைத்துவிட்டு அதிமுக விரைவில் தேர்தல் நடத்தக் கோரலாம் என்ற தகவல்கள் வந்ததால், மொத்தமாகதேர்தல் நடத்தலாம் என்பதால், இந்த இடைத் தேர்தல் விஷயத்தில் தேர்தல் ஆணையமும் சிறிது பொறுமை காத்தது. ஆனால், அப்படி ஏதும்தமிழக அரசின் தரப்பில் இருந்து கோரப்படவில்லை.

இதையடுத்து இடைத் தேர்தலுக்கான நடவடிக்கைகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டது. வாக்காளர் பட்டியல் சரி பார்க்கப்பட்டதோடு, இருதொகுதிகளுக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று கருத்தறிந்தனர்.

இந்த அதிகாரிகள் குழு தங்களது அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமீபத்தில் வழங்கினர்.

இதைத் தொடர்ந்து மே 14ம் தேதி தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஏப்ரல் 18ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 25ம் தேதியுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெற 28ம் தேதி கடைசி நாளாகும். வாக்குப் பதிவு மே 14ம் தேதி நடைபெறும். மே 16ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டுமுடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் எம்.எல்.ஏவாக இருந்த திருநாவுக்கரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி மரணமடைந்தார். கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ.சுதர்சனம் ஜனவரி மாதம் 9ம் தேதி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்படார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+