புலிகள் திடீர் தாக்குதல்: கருணா ஆதரவாளர்கள் 9 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் ராணுவத்தின் உதவியோடு செயல்பட்டு வந்த கருணா மற்றும் ஈஎன்டிஎல்ப் முகாம்கள் மீது விடுதலைப் புலிகள் திடீர்தாக்குதல் நடத்தினர். இதில் கருணா ஆதரவாளர்கள், ஈஎன்டிஎல்ப் படையினரில் 9 பேர் கொல்லப்பட்டனர்.

மட்டக்களப்பில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள வெலிகண்டா பகுதியில் நேற்று இத் தாக்குதல் நடந்தது. கொல்லப்பட்ட 9 பேரில் 5பேரின் உடல்கள் இன்று புலனருவா மாவட்டம் சொரிவில் ஆற்றின் கரையில் இருந்து மீட்கப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.

சமீபகாலமாக இப் பகுதியில் கருணா ஆதரவாளர்களும் ஈஎன்டிஎல்எப்பும் ராணுவத்தின் உதவியுடன் முகாம்கள் அமைத்து செயல்பட்டுவந்தனர்.

இப் பகுதியில் புலிகள் மீது இவர்கள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வந்தனர். இலங்கை ராணுவத்தின் உதவியுடன் அவர்கள் தாக்குதல் நடத்திவருவதாக நார்வே அமைதிக் குழுவும் குற்றம் சாட்டியுள்ளது.

இந் நிலையில் வன்னத்துறையடி என்ற இடத்தில் உள்ள 3 முகாம்களை புலிகள் திடீரெனத் தாக்கினர்.

இதில் ஈஎன்டிஎல்எப்பைச் சேர்ந்த விஜயன் உள்ளிட்ட 9 பேர் கொல்லப்பட்டதாக மட்டக்களப்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள்தெரிவிக்கின்றன. இந்த விஜயன் சமீபகாலமாக தென் இந்தியாவில் நடமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+