மீனாட்சி அம்மன் கோவிலில் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் தெற்கு கோபுரத்தின் அருகே வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. சித்திரைத்திருவிழாவையொட்டி லட்சக்கணக்கான மக்கள் கோவிலில் கூடி வரும் நிலையில் இந்த குண்டுகள் கைப்பற்றப்பட்டது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து மதுரை கமிஷ்னர் தலைமையில் பெரும் போலீஸ் படை கோவிலில் சோதனையில் ஈடுபட்டது.
தெற்குக் கோபுரம் அருகே காலணிகள் பாதுகாக்கும் இடத்தில் ஒரு மஞ்சள் பையில் இரு நாட்டு குண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.அவை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டன.
இச் சம்பவத்தையடுத்து கோவிலில் தீவிர கண்காணிப்பும் பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications