அன்புமணியின் வேஷ்டி பிரச்சனை: ஜெவுக்கு ராமதாஸ் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ்ப் பத்திரிக்கையாளர்கள் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்திலேயே பதிலளிக்கும் முதல்வர் ஜெயலலிதா, அன்புமணியைவிமர்சிக்க தகுதி இல்லாதவர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

கோட், சூட் போட்டுக் கொண்டு ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருக்கும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி, முதலில் வேட்டிக்கட்டிக் கொண்டு தமிழனாக மாறட்டும் என்று சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா விமர்சித்திருந்தார்.

இதற்கு அன்புமணியின் அப்பாவும், பாமக நிறுவனறுமான டாக்டர் ராமதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ளஅறிக்கையில்,

எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்பது வெறும் பேச்சளவில் மட்டும் நின்று விடக் கூடாது. ஆட்சியில் இருக்கும்வாய்ப்பைப் பயன்படுத்தி அதை செயல்படுத்துங்கள் என்று சட்டசபையில் பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

கர்நாடகத்தில் கன்னடம் படிக்காமல் யாரும் பள்ளிப் படிப்பை முடிக்க டியாது. அதேபோல தமிழ்நாட்டிலும் செய்ய வேண்டும் என்று பாமகதலைவர் ஜி.கே.மணி சட்டசபையில் பேசினார். அதற்குரிய பதிலை அளிக்காத ஜெயலலிதா, பாமகவையும், அதன் தமிழ் ஆதரவுநடவடிக்கைகளையும் கொச்சைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

தமிழுக்கு முதன்மை இடம் தாருங்கள் என்றால், அன்புமணியை முதலில் வேட்டி கட்டச் சொல்லுங்கள் என்று கூறி பிரச்சினையை திசைதிருப்பியுள்ளார் முதல்வர். அப்படியானால் இனி வேட்டி கட்டியவர்கள் மட்டும்தான் தமிழ் குறித்தும், தமிழர் கலாச்சாரம் குறித்தும் பேசவேண்டுமா?

வேட்டி கட்டியவர்கள்தான் தமிழர்களா, பேண்ட் சட்டை போட்டவர்கள் தமிழர்கள் இல்லையா?

அன்புமணி மத்திய அமைச்சர், டெல்லியிலிருந்து செயல்பட்டுக் கொண்டிருப்பவர். மத்தியில் ஆங்கிலம், இந்தியும் ஆட்சி மொழியாகஉள்ளன. அன்புமணி ஆங்கிலத்தில் பேசுகிறார். ஆனால் தமிழகத்திற்கு வந்தால் அவர் தமிழில்தான் பேசுகிறார், வேட்டி, சட்டைதான்அணிகிறார்.

ஆனால் தமிழ்நாட்டில் இருந்து கொண்டே, அதுவும் தலைநகர் சென்னையில் இருந்து கொண்டு, இங்குள்ள பத்திரிக்கையாளர்கள் தமிழில்கேட்கும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்லும் ஜெயலலிதாவுக்கு, அன்புமணியை குறை கூற என்ன தகுதி இருக்கிறது என்றுகேட்டுள்ளார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+