தமிழகத்தில் இன்று முதல் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது கடலில் மீன்கள் குஞ்சு பொறிக்கும் காலம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கடலில் மீன்பிடிக்க மீனவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.
அந்த வகையில் இன்று முதல் மீன் பிடிப்பதற்கு தடை அமலுக்கு வந்துள்ளது.