இடை தேர்தல்: சீட் கோரி அதிமுகவினர் விண்ணப்பம்
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அதிமுகவினர் இன்று முதல் 3 நாட்களுக்குரூ. 10,000 கட்டி விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதையடுத்து போட்டியிட சீட் கோரி அதிமுகவினர் விண்ணப்பிக்க ஆரம்பித்துள்ளனர்.
ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், மே மாதம் 14ம் தேதி காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய சட்டசபைத்தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இத் தேர்தலில் போட்டியிட விரும்புகிற அதிமுகவினர் இன்று முதல் 18ம் தேதி வரை 3 நாட்களுக்கு, காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை தலைமைக் கழகத்தில் உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுபூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ. 10,000 கொடுத்து விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று கட்சியின்பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மற்றொரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று காலை முதல் அதிமுகவினர் சீட் கோரி மனு கொடுத்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் போட்டியிட தென்சென்னை அதிமுக வழக்கறிஞர்கள் அணி செயலாளர் தாமல் டி.கண்ணன் ரூ. 10,000 கட்டி மனு அளித்தார்.
அதேபோல, காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் அதிமுக செயலாளர் ராஜேந்திரனும் ரூ. 10,000 கட்டி விண்ணப்பம் அளித்தார்.
விண்ணப்பங்களை அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், சுலோச்சனா சம்பத், விசாலாட்சி நெடுஞ்செழியன் ஆகியோர்பெற்றுக் கொண்டனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் வேட்பாளர்களை இறுதி செய்வதில் திமுக கூட்டணி தான் முன்னிலை வகித்தது.அதிமுக பின் தங்கியது.
இப்போது காஞ்சி, கும்மிப்பூண்டி தொகுதிகளில் எந்தக் கட்சி போட்டியிடுவது என்பது குறித்து திமுக கூட்டணித்தலைவர்கள் இன்னும்ஆலோசனை கூட நடத்தாத நிலையில் வேட்பாளர்களை தேர்வு செய்யும் வேலையைஅதிமுக மிகத் துரிதமாகத் தொடங்கியுள்ளது.
இந்த இடைத் தேர்தல்களுக்கான வேட்பு மனு தாக்கல் 18ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்குகிறது.
நாகூர் ஹனீபா இசைக் கச்சேரியுடன் தொடங்கும் மாநாட்டில் கவிஞர் நிர்மலா சுரேஷ் கொடியேற்றி வைத்துப் பேசுகிறார். பின்னர்மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கோ.சி.மணி வரவேற்புரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து மாநாட்டை திமுக துணைப் பொதுச்செயலாளர் பரிதி இளம்வழுதி திறந்து வைக்கிறார்.
பின்னர் துரைமுருகன் தலைமையில் மாநாடு தொடங்குகிறது. பல்வேறு தலைவர்கள் பேசுகிறார்கள். மாலை 4 மணிக்குதீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன. பொதுச்செயலாளர் அன்பழகன் இரவு நிறைவுரையாற்றுகிறார்.
2வது நாளான நாளை துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பேசுகிறார்கள். பின்னர் மாலை 5மணிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்குகிறார்கள்.
காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நல்லகண்ணு,வரதராஜன், ஆர்.எம்.வீரப்பன், டாக்டர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இரவு 8 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றுகிறார். மாநாட்டையொட்டி பிரமாண்ட மேடையும், வரவேற்புவளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. நகரெங்கும் திமுக சார்பில் அலங்கார வளைவுகளும், தோரணங்களும்அமைக்கப்பட்டுள்ளன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications