இளம் வயதிலேயே செக்ஸ் விளையாட்டு: ராதாகிருஷ்ணன் வாக்குமூலம்
சென்னை:
சிறு வயதிலிருந்தே சிறுமிகளுடன் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளதாக காம வெறியன் ராதாகிருஷ்ணன் தனதுவாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சிறுமிகளிடம் தனது செக்ஸ் இச்சையைத் தீர்த்துக் கொண்ட காம வெறியன் ராதாகிருஷ்ணன் தனது கொடூரச் செயல்கள் குறித்துபோலீஸாரிடம் 12 பக்க ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
3 நாள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ராதாகிருஷ்ணனிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது இந்த வாக்குமூலத்தைஅளித்துள்ளார் ராதாகிருஷ்ணன்.
வாக்குமூலம் வருமாறு:
சின்னப் பையனாக இருந்தபோதே எனக்கு செக்ஸ் விளையாட்டு என்றால் ரொம்பப் பிடிக்கும். எனது வயது சிறுமிகளிடம் செக்ஸ்குறும்பு செய்வேன். அவர்கள் எனது பெற்றோரிடம் புகார் கூறுவார்கள். இதனால் எனது தாய், தந்தையிடம் அடிக்கடி அடிவாங்குவேன்.
பெரியவனாக வளர்ந்த பிறகும் செக்ஸ் விளையாட்டு என்னுடன் தொடர்ந்து வந்தது. திருமணமான பிறகும் இது தொடர்ந்தது.எனது மனைவி என்னை விட்டுப் பிரிந்து சென்ற பிறகு நான் விபச்சாரிகளிடம் செல்லத் தொடங்கினேன். அவர்களிடம் எனதுஇச்சையைத் தீர்த்துக் கொண்டேன்.
பின்னர் வாணியம்பாடி சங்கிலிக்குப்பம் பகுதியில் பண்ணை வீட்டைக் கட்டினேன். இந்த வீட்டை எனது காமக் களியாட்டகளமாக பயன்படுத்தத் தொடங்கினேன். வார இறுதி நாட்களில் விபச்சாரப் பெண்கள், எனக்குத் தெரிந்த பெண்களுடன் அங்குசெல்ல ஆரம்பித்தேன்.
நான் பெண்களுடன் வருவதைப் பார்த்த அப்பகுதியினர் ஒரு மாதிரியாக பேச ஆரம்பித்தனர்.
இந்த சமயத்தில்தான் புரோக்கர் கிட்டு எனக்கு ஒரு யோசனை கூறினார்.
பெரியவர்களை விட சிறுமிகளிடம் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து அவர் கூறிய யோசனை எனக்குப் பிடித்திருந்தது. ஏழைச்சிறுமிகளை தத்தெடுத்துக் கொண்டு பின்னர் காம லீலைகள் புரியும் வித்தையை கிட்டு எனக்கு கற்றுக் கொடுத்தார்.
முதலில் 14 வயது சிறுமியை அழைத்து வந்தார். அந்த சிறுமியிடம் எனது செக்ஸ் விளையாட்டு வெற்றிகரமாக இருந்தது. இதைத்தொடர்ந்து ஏராளமான சிறுமிகளை எனது இச்சைக்கு பயன்படுத்திக் கொண்டேன்.
இப்படியாக எனது செக்ஸ் விளையாட்டு போய்க் கொண்டிருந்தபோது தான் ஆனந்தியை சந்தித்தேன். ஆனந்தியை எனக்குரொம்பப் பிடித்து விட்டது. அவளை என்னுடனேயே வைத்துக் கொள்ள நினைத்திருந்தேன்.
நினைத்த நேரத்தில் அவளுடன் பேசுவதற்காக செல்போன் வாங்கிக் கொடுத்திருந்தேன். பண்ணை வீட்டிலேயே வைத்திருக்காமல்அவளை சென்னைக்குக் கூட்டி வந்ததுதான் தப்பாகப் போய் விட்டது என்று தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்ராதாகிருஷ்ணன்.
போலீஸ் மீது குற்றச்சாட்டு:
எழும்பூர் நீதிமன்றத்தில் இந்த வாக்குமூலத்தை போலீஸார் தாக்கல் செய்தபோது, போலீஸார் தன்னை மிரட்டி இந்தவாக்குமூலத்தைப் பெற்றதாக ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டினார்.
எழும்பூர் 13வது நீதிமன்ற நீதிபதி ராமநாதன் முன்பு ராதாகிருஷ்ணனை போலீஸார் ஆஜர்படுத்தியபோது, நான் மத்திய அரசுஊழியர். என்னை போலீஸார் தங்களது காவலில் வைத்திருந்தபோது அடித்து துன்புறுத்தினர்.
இதனால் எனது உடலில் உள்காயம் ஏற்பட்டுள்ளது. எனக்கு ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது. இதற்கு மாத்திரை கேட்டபோதுகொடுக்கப்படவில்லை.
என்னை சித்திரவதை செய்து போலீஸார் வாக்குமூலம் வாங்கினார்கள். என்னை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கஏற்பாடு செய்ய வேண்டும். எனது வக்கீலுக்கு பெண்களை சப்ளை செய்ததாகவும், எனது காரைக் கொடுத்ததாகவும் போலீஸாரேஎழுதி வாங்கினார்கள்.
வெளியில் சமரசம் நடக்கிறது என்று என்னிடம் கூறி குற்றத்தை ஒப்புக் கொள்ள கூறினார்கள். மறுத்தால் பத்திரிக்கைகளுக்குதவறான தகவல்களை அளிப்போம் என்று கூறி மிரட்டினார்கள் என்றார் ராதாகிருஷ்ணன்.
இதை நீதிபதி ராமநாதன் பதிவு செய்து கொண்டார். பின்னர் அவரது காவலை வருகிற 21ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிஉத்தரவிட்டார். மேலும், ராதாகிருஷ்ணனிடம் ஆண்மை பரிசோதனை செய்யவும் நீதிபதி அனுமதி வழங்கினார். இதையடுத்துஇன்று அரசு பொது மருத்துவமனையில் அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்தப்படவுள்ளது.
நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டபோது, ராதாகிருஷ்ணன் முகத்தை மூடாமல் தெளிவாக காணப்பட்டார்.பத்திரிக்கையாளர்களைப் பார்த்ததும் மிகவும் வேகமாக, எனது மனைவி கோமள வல்லிதான் இந்தப் பிரச்சினைகளுக்கெல்லாம்காரணம்.
போலீஸாருக்குப் பணம் கொடுத்து பொய்ப் புகாரைக் கூறியுள்ளார் அவர். கோமளவல்லிக்கு நிறைய லாரிகள் பினாமி பெயரில்ஓடுகிறது. எனது பெயரைக் கெடுப்பதற்காகத்தான் இவ்வாறு அவதூறுகளை கிளப்பி விட்டுள்ளார் என்று கூறியபடி சென்றார்ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து கோமளவல்லியிடம் கேட்டபோது, பெண்களின் சாபம் அவரை சும்மா விடாது. கடவுள் இருக்கிறார். அவர் பார்த்துக்கொள்வார். என் மீது புகார் கூற அவருக்குத் தகுதி இல்லை. கடவுள் என்னைக் காப்பாற்றுவார் என்றார்.












Click it and Unblock the Notifications