போலீஸிடமிருந்து தப்ப சங்கிலியை விழுங்கிய பெண்

Subscribe to Oneindia Tamil

நாகர்கோவில்:

போலீஸ் பிடியிலிருந்து தப்புவதற்காக திருடிய சங்கிலியை வாயில் போட்டு விழுங்கினார் ஒரு பெண்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் உள்ளது பிரபலமான தானுமலையான் கோவில். இங்கு தமிழ்ப்புத்தாண்டுதினத்தன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி கும்பிட்டனர்.

அப்போது, நாகர்கோவிலைச் சேர்ந்த செல்வராணி என்ற பெண்ணும், வேளாங்கண்ணியைச் சேர்ந்த குமுதினி என்றபெண்ணும் கோவிலுக்கு வந்திருந்த பெண்களிடம் சங்கிலி திருட்டில் ஈடுபடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில் நின்றிருந்த சிறுமியிடம் குமுதினி சங்கிலியைப் பறித்துள்ளார். அதை பாதுகாப்புக்கு நின்றிருந்தபோலீஸார் பார்த்து விட்டு இருவரையும் நோக்கி வேகமாக வந்தனர்.

இதைப் பார்த்து விட்ட இருவரும் தப்பி ஓடினர். அப்போது செல்வராணி, பறித்த சங்கிலியை தனது வாயில் போட்டுவிழுங்கினார்.

போலீஸார் இருவரையும் கைது செய்து விசாரித்தபோது தான், சங்கிலியை விழுங்கிய விவரம் தெரியவந்தது.இதையடுத்து செல்வராணியை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். அங்கு ஸ்கேன் செய்துபார்த்தபோது, சங்கிலி வயிற்றில் இருந்தது தெரியவந்தது. அதை அறுவைச் சிகிச்சை செய்து எடுக்க டாக்டர்கள்முடிவு செய்துள்ளனர்.

தஞ்சை மண்டல திமுக மாநாடு இன்று காலை தஞ்சாவூர் -புதுக்கோட்டை சாலையில் உள்ள மேலவஸ்தா சாவடி என்ற இடத்தில்தொடங்குகிறது.

நாகூர் ஹனீபா இசைக் கச்சேரியுடன் தொடங்கும் மாநாட்டில் கவிஞர் நிர்மலா சுரேஷ் கொடியேற்றி வைத்துப் பேசுகிறார். பின்னர்மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவர் கோ.சி.மணி வரவேற்புரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து மாநாட்டை திமுக துணைப் பொதுச்செயலாளர் பரிதி இளம்வழுதி திறந்து வைக்கிறார்.

பின்னர் துரைமுருகன் தலைமையில் மாநாடு தொடங்குகிறது. பல்வேறு தலைவர்கள் பேசுகிறார்கள். மாலை 4 மணிக்குதீர்மானங்கள் கொண்டு வரப்படுகின்றன. பொதுச்செயலாளர் அன்பழகன் இரவு நிறைவுரையாற்றுகிறார்.

2வது நாளான நாளை துணைப் பொதுச் செயலாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பேசுகிறார்கள். பின்னர் மாலை 5மணிக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேசத் தொடங்குகிறார்கள்.

காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நல்லகண்ணு,வரதராஜன், ஆர்.எம்.வீரப்பன், டாக்டர் சேதுராமன் உள்ளிட்ட பல்வேறு தோழமைக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இரவு 8 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதி நிறைவுரையாற்றுகிறார். மாநாட்டையொட்டி பிரமாண்ட மேடையும், வரவேற்புவளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது. நகரெங்கும் திமுக சார்பில் அலங்கார வளைவுகளும், தோரணங்களும்அமைக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+