சாலைப் பணியாளர்களுக்காக போராட்டம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் நேற்று நடந்த திமுக மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் திமுக தலைவர் கருணாநிதி, துரைமுருகன், ஆற்காடுவீராசாமி, ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மற்றும் பரிதி இளம்வழுதி ஆகியோர் மேடையில் உள்ளனர்.

சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை தரக் கோரி ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மாபெரும் போராட்டம்நடத்தப்படும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

தஞ்சையில் நடந்து வந்த திமுக மண்டல மாநாட்டின் நிறைவாக திமுக தலைவர் கருணாநிதி, மற்றும் கூட்டணிக் கட்சித்தலைவர்கள் நேற்று மாலை உரையாற்றினார்கள்.

கருணாநிதி தனது நிறைவுரையில், வேலை இழந்த 10,000 சாலைப் பணியாளர்கள் திமுக ஆட்சிக்காலத்தில்நியமிக்கப்பட்டவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு மீண்டும் வேலை தர அதிமுக அரசு மறுத்து வருகிறது,உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் பிடிவாதம் பிடித்து வருகிறது அதிமுக அரசு.

10,000 சாலைப் பணியாளர்களுக்கும் மீண்டும் வேலை தருவதாக ஒரு அறிவிப்பைக் கூட சட்டசபையில் வெளியிடவில்லை.ஆனால் தினசரி 110வது விதியைப் பயன்படுத்தி ஏராளமான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.

காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலில் நமது அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும், என்ன செய்யவேண்டும் என்பது குறித்து விவாதிக்க 19ம் தேதி சென்னையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணித் தலைவர்களின் கூட்டம்கூட்டப்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தின்போது, சாலைப் பணியாளர்களுக்காக, தோழமைக் கட்சிகள் சேர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்பதுகுறித்து அவர்களுடன் விவாதிக்க உள்ளேன். அந்த ஆலோசனைக்குப் பிறகு போராட்டத்தை எப்போது நடத்துவது என்பதுகுறித்து பேசி முடிவு செய்யப்படும்.

இந்த 2 நாள் மாநாட்டில் மாநில சுயாட்சி குறித்த தீர்மானம் தான் முக்கியத்துவம் வாய்ந்தது. 1974ம் ஆண்டு தமிழகசட்டமன்றத்தில் இந்தத் தீர்மானத்தை நான் முன்மொழிந்து, அதிமுகவைத் தவிர மற்ற அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட, நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்திக்கு அனுப்பி வைத்தேன்.

அதற்கு அவர் எனக்கு எழுதிய பதிலில், இது பெரிய விஷயம், அனைத்து மாநிலங்களுடன் கலந்து பேசி முடிவு செய்வதாகதெரிவித்திருந்தார். அந்தத் தீர்மானம் தான் இப்போதும் முதல் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

எல்லா மாநிலங்களிலும் அலுவலக மொழியாக உள்ள பிராந்திய மொழிகளை மத்திய ஆட்சி மொழியாக்க வேண்டும்.அப்போதுதான் மொழிப் பிரச்சினை, மொழித் திணிப்பு போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு ஏற்படும் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், மாநில சுயாட்சிக்கு குரல் தந்த உங்களுக்குப் (கருணாநிதி)பின்னால் நாங்கள் அனைவரும் அணிவகுப்போம். சட்டப் பேரவைக்குத் தேர்தல் வருகிறது.

அதற்கு முன்பாக இடைத் தேர்தல் வருகிறது. காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டிக்கு வாருங்கள், வெற்றி பெறுவோம். அது ஒன்றே நமதுகுறிக்கோள் என்றார்.

காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசுகையில், விவசாயிகளை இந்த அரசு புறக்கணிக்கிறது. விவசாயிகள் சேற்றில் கால்வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்பதை அரசு மறந்து விடக் கூடாது.

திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சட்டசபைத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப்பிடிக்கும் என்றார் வாசன்.

பாமக தலைவர் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் மூவேந்தர் முன்னேற்றக் கழகதலைவர் டாக்டர் சேதுராமன், தமிழ்நாடு முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கூட்டத்தில்பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+