முதல் சுற்றில் புதிய போப் தேர்வாகவில்லை
Subscribe to Oneindia Tamil
வாடிகன்:
நேற்று தொடங்கிய புதிய போப் ஆண்டவருக்கான தேர்தலில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை.
புதிய போப் ஆண்டவருக்கான தேர்தல் வாடிகனில் நேற்று தொடங்கியது. உலகம் முழுவதும் இருந்து வந்திருந்த 117கர்தினால்கள் தங்களது ஓட்டுகளை பதிவு செய்தனர். இதில் யாருக்கும் மூன்றில் இரண்டு பங்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை.உடனடியாக அந்த ஓட்டுச்சீட்டுகள் எரிக்கப்பட்டன.
இதை தொடர்ந்து நேற்று புதிய போப் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதன் காரணமாக வாடிகன் தேவாலய கூரையில்பொருத்தப்பட்டுள்ள குழாயில் கரும்புகை வெளியானது. இதைப் பார்த்த மக்கள் புதிய போப் தேர்வாகவில்லை என்பதைதெரிந்து கொண்டனர்.
புதிய போப் தேர்வானால் குழாயில் இருந்து வெள்ளை நிற புகை வெளியாகும்.












Click it and Unblock the Notifications