ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறுமிகளை சீரழித்த காமவெறியன் ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்க சென்னைமுதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

20க்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக சீரழித்த ராதாகிருஷ்ணன் தற்போதுகைது செய்யப்பட்டுள்ளார். அவரை 3 நாள் காவலில் எடுத்து போலீஸார் தீவிரவிசாரணை நடத்தியுள்ளனர். அவரால் பாதிக்கப்பட்ட சிறுமிகளிடமும் விசாரணைநடந்துள்ளது.

இந்த நிலையில் ஜாமீன் கோரி ராதாகிருஷ்ணன் சென்னை முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். அந்த மனு செவ்வாய்க்கிழமை நீதிபதி முருகேசன்முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, வழக்கு விசாரணை இன்னும் முடிவடையாததால், ராதாகிருஷ்ணனுக்குஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு வக்கீல் கணேஷ் வாதாடினார். இதை ஏற்ற நீதிபதிமுருகேசன், ராதாகிருஷ்ணனின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஆனந்திக்கு கிராமத்தினர் ஆதரவு:

காமவெறியன் ராதாகிருஷ்ணனால் பாதிக்கப்பட்ட சிறுமி ஆனந்திக்கும், அவரதுகுடும்பத்துக்கும் உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக அவரது சொந்த கிராமமானஉதயேந்திரம் கிராம மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

ராதாகிருஷ்ணனால் சீரழிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர்தான் ஆனந்தி. இவரும்,இவரது தாயாரும் இப்போது சென்னையில் உள்ளனர். ஆனந்தி கொடுத்த புகாரின்பேரில்தான் ராதாகிருஷ்ணன் பிடிபட்டார்.

இந்த நிலையில் ஆனந்தியையும், அவரது தாயாரையும் கிராம மக்கள் ஒதுக்கி வைத்துவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் உதயேந்திரம் கிராம மக்கள்இதை மறுத்துள்ளனர்.

கிராம தலையாரி கணேசன் என்பவர் இதுகுறித்துக் கூறுகையில், ஆனந்திகுடும்பத்திற்கு தற்போது அனுதாபம் மட்டுமல்லாது ஆதரவும் தேவை. அந்த ஆதரவைநாங்கள் கொடுக்கத் தயாராகவே உள்ளோம். அவர்களை நாங்கள் ஒதுக்கிவைக்கவில்லை.

எங்களால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு எப்படி உதவலாம் என்பது குறித்து பேசிவருகிறோம். நிச்சயம் அவர்களை நாங்கள் கைவிட மாட்டோம் என்றார்.

கண்ணகி என்ற பெண் கூறுகையில், பெரிய பணக்காரரான ராதாகிருஷ்ணன் செய்தஉதவிகளில் உள்நோக்கம் இருக்கும் என்று நாங்கள் ஒரு போதும் நினைத்துக் கூடபார்த்ததில்லை. நகரங்களில்தான் பக்கத்து வீடுகளில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பார்கள். அதேபோல நாங்களும் நடந்து கொண்டு விட்டோம்.அதற்காக வருந்துகிறோம்.

ஆனந்தி விவகாரம் எங்களது கண்களைத் திறந்து விட்டது. இதுமாதிரியானசம்பவங்கள் இனிமேல் நடக்காத வகையில் மிகவும் விழிப்புணர்வுடன் இருப்போம். அவர்களுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய நாங்கள் தயாராகஇருக்கிறோம் என்றார் கண்ணகி.

இதேபோல, இக்கிராமத்தில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களும் ஆனந்திகுடும்பத்திற்கு உதவ முன் வந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+