தர்மபுரி: 2 மாணவிகள் கண்ணீர் சாட்சியம்
சேலம்:
தர்மபுரியில் வேளாண்மை பல்கலைக்கழக பேருந்தை அதிமுகவினர் தீவைத்துக்கொளுத்தியது குறித்து 2 முன்னாள் மாணவிகள் கண்ணீர் மல்க சாட்சியம் அளித்தனர்.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணராஜாமுன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியைகள், பஸ் டிரைவர், க்ளீனர்,மாணவிகள் ஆகியோர் தொடர்ந்து சாட்சியம் அளித்து வருகிறார்கள்.
இதையடுத்து தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில்பாதுகாப்பாக பஸ்ஸை நிறுத்தலாம் என்று திட்டமிட்டோம். ஆனால் சிலநிமிடங்களிலேயே ஒரு கும்பல் எங்களது பஸ்சை நிறுத்தி, தீ வைத்தது.
நான் முன்பக்கமாக ஓடி தப்பிக்க முயன்றேன். ஆனால் அங்கு நிறையப் பேர்முண்டியடித்துக் கொண்டு இறங்கியதால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. அதற்குள்பஸ்சில் புகை சூழ்ந்ததால் அனைவருக்கும் மூச்சு முட்டியது. தீ என் மீதும் பட்டதில்எனது தலை முடி கருகியது, முதுகு மற்றும் கழுத்தில் தீக்காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் பஸ்சின் கண்ணாடியை உடைத்து சில மாணவர்கள் நான் உள்பட சிலமாணவிகளை வெளியே இழுத்துக் காப்பாற்றினர். எனக்கு தர்மபுரி அரசுமருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு எனது சொந்த ஊரானஅவல்பூந்துரையில் தனியார் மருத்துவமனையில் 2 நாள் சிகிச்சை பெற்றுக்கொண்டேன் என்றார் கண்ணீர் மல்க.
மற்றொரு முன்னாள் மாணவியும், தற்போது சென்னையில் தனியார் நிறுவனத்தில்பணியாற்றி வருபவருமான மாணவி சுஷ்மா கூறுகையில், அப்போது நான் 2வதுவருடம் படித்துக் கொண்டிருந்தேன். பஸ்சில் தீப்பிடித்துக் கொண்டபோது நான்முன்பக்கமாக குதித்து உயிர் தப்பினேன். பிறகு மயங்கி விட்டேன்.
சில மணி நேரங்களுக்குப் பிறகுதான் எனக்கு மயக்கம் தெளிந்தது. அப்போதுகோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகளும் தீயில் கருகி பலியானதுகுறித்து அப்போது தெரிந்து கொண்டேன் என்றார் கதறி அழுதபடி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications