காஞ்சி, கும்மிடிப்பூண்டி: பெண் வாக்காளர்கள் அதிகம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இடைத் தேர்தல் நடக்கவுள்ள காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம்உள்ளனர்.

காலியாகவுள்ள காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டியில் மே 14ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் திங்கள்கிழமை தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 25 ம் தேதியாகும்.

இடைத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி இரு தொகுதிகளும் அடங்கிய காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

இரு தொகுதிகளிலும் அரசு சார்பில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களும் செயல்படுத்தக் கூடாது. துறை சாராத அமைச்சர்களின்சுற்றுப்பயணத்தில் அதிகாரிகள் கலந்து கொள்ளக் கூடாது, அவர்களை நேரில் சென்று சந்திக்க்க கூடாது என்பது உள்ளிட்டபல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நடத்தை விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

காஞ்சிபுரம் தொகுதியில் கடந்த முறை அதிமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ்.திருநாவுக்கரசு வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக இருந்தார்.இத்தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 35 ஆயிரத்து 598 பேர் ஆவர். இவர்களில் பெண் வாக்காளர்களேஅதிகம். அவர்களது எண்ணிக்கை 1,21,211 பேர் ஆவர். ஆண் வாக்காளர்கள் 1,14,387 ஆவர்.

கும்மிடிப்பூண்டியின் வாக்காளர் எண்ணிக்கை 1,93,325 ஆகும். இவர்களில் பெண்கள் 99,921 பேர் ஆவர். ஆண்வாக்காளர்களின் எண்ணிக்கை 93,404 ஆகும்.

இரு தொகுதிகளிலும் ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த தேர்தலில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்குகள் விவரம்:

காஞ்சிபுரம்:

மொத்த ஓட்டுக்கள்: 2,51,716.
பதிவானவை: 1,50,953.
எஸ்.எஸ்.திருநாவுக்கரசு (அதிமுக) - 84,246.
சி.வி.எம்.ஏ. சேகர் (திமுக) - 60,643.
வளையாபதி (மதிமுக) - 2,479.

கும்மிடிப்பூண்டி:

மொத்த ஓட்டுக்கள்: 2,09,460.
சுதர்சனம் (அதிமுக) - 73,467.
கி.வேணு (திமுக) - 48,509.
நெடுஞ்செழியன் (புரட்சி பாரதம்) - 2376.
ரா.பாலாஜி (மதிமுக) - 2311.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+