கீரிப்பட்டி: கிராம மக்களின் வேட்பாளர் வெற்றி
மதுரை:
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர் தேர்தலில் ஊர் மக்கள் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளர் அழகுமலைவெற்றி பெற்றார்.
கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தேர்தலில் தலித் வகுப்பைச் சேர்ந்தவர்களே போட்டியிட முடியும். ஆனால் இதை ஏற்றுக் கொள்ள ஊரில்உள்ள தேவர் சமுதாயத்தினர் மறுத்து தேர்தலை நடத்துவதில் சிக்கல் செய்து வருகிறார்கள்.
இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் அழகுமலை 487 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பூங்கொடியானுக்கு 27வாக்குகளே கிடைத்தன. இதையடுத்து அழகுமலை வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
வெற்றி பெற்ற அழகுமலை செய்தியாளர்களிடம் பேசுகையில், ஊர் மக்களுக்கு நல்லது செய்வேன் என்றார். வருகிற 24ம் தேதிஅவர் தலைவராகப் பதவியேற்கவுள்ளார். வழக்கம் போல பதவியேற்ற பின்னர் அவர் தனது பதவியை ராஜினாமாசெய்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிற ஊராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அரக்கோணம், கம்பம், விருதுநகர், திருச்செங்கோடு உள்ளிட்ட 6 நகராட்சி உறுப்பினர்கள்தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. வில்லிவாக்கம் ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் பாமக வேட்பாளர் வெற்றி பெற்றார்.


Click it and Unblock the Notifications
