காவிரி ஆணையத்தை ஏன் கூட்டவில்லை? பாஜக கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக உள்ளிட்ட தமிழக கட்சிகள் இடம் பெற்றுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பதவிக்கு வந்து 1 வருடமாகியும், ஏன்இதுவரை காவிரி நீர் ஆணையத்தைக் கூட்டவில்லை என்று தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கேள்விஎழுப்பியுள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், காவிரி நீர் ஆணையத்தைக் கூட்டக் கோரி கூப்பாடுபோட்ட திமுக, பாமக உள்ளிட்ட தமிழக கட்சிகள் இடம் பெற்றுள்ள மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு பதவிக்கு வந்து 1வருடமாகிறது.

இருப்பினும் இதுவரை ஒருமுறை கூட காவிரி நீர் ஆணையத்தைக் கூட்டவில்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாபலமுறை கோரிக்கை விடுத்தும் அதுகுறித்து மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை.

திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் ஆணையத்தைக் கூட்ட நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழகத்தின் உரிமையைநிலை நாட்டுவதற்கான எந்த நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடவில்லை, அக்கறை காட்டவில்லை.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது 4 ஆண்டு காலம் பதவி சுகத்தை அனுபவித்த திமுக போன்ற கட்சிகள் இப்போது பாஜகவைமதவாத கட்சி என்று விமர்சிக்கின்றன. இது அவர்களது சுய நலப் போக்கையே காட்டுகிறது.

வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடும் என்றார்சி.பி.ராதாகிருஷ்ணன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+