ஜெயேந்திரர் மீது புது வழக்கு: உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை
சென்னை:
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி கோவிலில் இருந்த சிவன் சன்னதியை வெடி வைத்துத் தகர்த்து அகற்றியது தொடர்பாகஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீது வழக்குத் தொடர போலீஸுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் இருந்த சிவன் சன்னதியை ஜெயேந்திரர் தூண்டுதலின் பேரில்அப்புறப்படுத்தியதால், அதைக் கண்டித்த அர்ச்சகர் மாதவன் சென்னையில் வைத்துத் தாக்கப்பட்டார். இதுதொடர்பாகஜெயேந்திரர் மீது ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜெயேந்திரர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு கூறி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் அதைஏற்றுப் பதிவு செய்ய போலீஸார் மறுத்து விட்டனர்.
எனவே ஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி கே.பி.சிவசுப்ரமணியம், மனுதாரரின் புகாரை ஏற்று போலீஸார் வழக்குப் பதிவு செய்யமறுத்தது கண்டனத்துக்குரியது என்று கூறி இதுதொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்குவிசாரணை 25ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications