ஆசிரியை மீனாட்சி வழக்கு: சிபிசிஐடி போலீஸ் மீது மீண்டும் புகார்!
கரூர்:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கு தொடர்பாக, மீனாட்சியின் குடும்பத்தினரை மிரட்டியும், சித்திரவதைசெய்தும் சிபிசிஐடி போலீஸார் பொய் வாக்குமூலம் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த ஆசிரியை மீனாட்சி காணாமல் போய் 6 மாதங்களாகிறது. இந்த வழக்கை மதுரைஉயர்நீதிமன்றக் கிளையின் உத்தரவுப்படி சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் மீனாட்சி கடத்தப்பட்டு கொலை செய்திருக்கலாம் என்று போலீஸ் தரப்பு முடிவு செய்தது. இதற்கான ஆதாரத்தைத்தேடும் பணியிலும் போலீஸார் தீவிரமாக இறங்கியுள்ளனர். வருகிற 27ம் தேதி இந்த வழக்கில் இறுதி அறிக்கையை சிபிசிஐடிபோலீஸார் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றக் கிளை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மீனாட்சி காணாமல் போனது தொடர்பாக அவர்களது உறவினர்களை சிபிசிஐடி போலீஸார் மீரட்டியும்,துன்புறுத்தியும் பொய் வாக்குமூலம் கொடுக்குமாறு வலியுறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆசிரியை மீனாட்சியின் மைத்துனர் பசுபதியின் கடையில் வேலை பார்த்து வரும் சந்திரசேகர் என்பவர் இதுகுறித்துக் கூறுகையில்,என்னை சிபிசிஐடி போலீஸார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் சித்திரவதை செய்தார்கள்.
எனது இரு கால்களுக்கு கீழேயும் கடுமையாக அடித்து, அவர்கள் கூறியதுபோல வாக்குமூலம் அளிக்குமாறு வற்புறுத்தினர்.
இதேபோலவே, மீனாட்சியின் உறவினர்கள் பலரிடம் போலீஸார் சித்திரவதை செய்து பொய்யான வாக்குமூலத்தைப்பெற்றுள்ளனர் என்று கூறியுள்ளார் சந்திரசேகர்.
மீனாட்சி காணாமல் போன வழக்கில், ஆரம்பத்திலிருந்தே போலீஸாரின் விசாரணை கடுமையான விமர்சனத்துக்கு ஆளாகிவந்துள்ளது. மதுரை உயர்நீதிமன்றக் கிளையும், குளித்தலை போலீஸாரின் விசாரணையை கடுமையாக விமர்சித்தது.
இதையடுத்து சிபிசிஐடி போலீஸுக்கு வழக்கு மாற்றப்பட்டது. ஆனால் தற்போதும் அதேமாதிரியான புகார்கள் கிளம்பியுள்ளதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications