திமுக மாநாட்டுக்கு பஸ்: போக்குவரத்துக் கழக மேலாளர்கள் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்:

தஞ்சாவூரில் நடந்த திமுக மாநாட்டின்போது, மாநாடு நடந்த பகுதி வழியாக ஏராளமான அரசு பேருந்துகளை திருப்பிவிட்டதற்காக, தஞ்சை அரசு போக்குவரத்துக் கழகத்தின் இரண்டு மேலாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக தஞ்சை மண்டல மாநாடு சமீபத்தில் தஞ்சாவூரில் 2 நாட்கள் நடந்தது. மாநாடு நடந்த சனி மற்றும் ஞாயிறு ஆகிய இருநாட்களிலும், திமுக தொண்டர்கள் கூட்டம் தஞ்சையில் அளவுக்கு அதிகமாகவே இருந்தது.

இந்த நிலையில் தஞ்சை பழைய பேருந்து நிலையத்திலிருந்து மாநாடு நடந்த மேலவசாவடி வழியாக விமானப்படை நிலையம்வரை நிறைய பேருந்துகள் இயக்கப்பட்டன.

"பொதுமக்களின்" கோரிக்கையை ஏற்று பிற பகுதிகளில் ஓடிக் கொண்டிருந்த 10க்கும் மேற்பட்ட பேருந்துகள் திமுக மாநாடுநடந்த பகுதி வழியாக திருப்பி விடப்பட்டன.

இதையடுத்து திமுக மாநாடு நடந்த ஊர் வழியாக பஸ்களைத் திருப்பி விட்டதற்காக அரசுப் போக்குவரத்துக் கழக டவுன்டெப்போ-1 மேலாளர் சிதம்பரநாதன், டவுன் டெப்போ-2 மேலாளர் டி.ராஜமோகன் ஆகிய இருவரும் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டுள்ளனர்.

இது அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து அரசுப் போக்குரவத்துக்கழக ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் லட்சுமணன் கூறுகையில், திமுக வினர் மட்டுமல்லாது, ஏராளமான பொதுமக்களும்அன்றைய தினம் பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர்.

அன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ. 60,000 கூடுதல் வசூலாகியுள்ளது என்று கூறினார்.

ஆனால் இரு மேலாளர்களும் வேறு காரணங்களுக்காகத்தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தஞ்சை அரசுப் போக்குவரத்துக்கழக நிர்வாக இயக்குநர் திராவிட மணி கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+