"மாரியப்பனை சாந்தப்படுத்திய "கமலா!
திருச்சி:
சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மாரியப்பனுக்குப் பிடித்திருந்த மதத்தை கட்டுப்படுத்த கமலா என்ற பெண் யானை,மாரியப்பனுடன் விடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாரியப்பன் சாந்தமாகியுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
திருச்சி அருகே உள்ள புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் யானை மாரியப்பனுக்கு புதன்கிழமை காலை மதம் பிடித்தது.இதையடுத்து மாரியப்பனை கொட்டகைக்குள் வைத்துப் பூட்டினர். பூட்டிய கொட்டகைக்குள் யானை அட்டகாசம் செய்து வந்தது.
டாக்டர் செந்தில்குமார் தலைமையிலான டாக்டர்கள் குழு, புதன்கிழமை இரவு முழுவதும் போராடி மாரியப்பனுக்கு மயக்கமருந்து செலுத்தி மயக்கமடையச் செய்தனர்.
இதையடுத்து தனியார் ஒருவடமிருந்து கமலா என்ற பெண் யானையை வரவழைத்த டாக்டர்கள், அந்த யானையைமாரியப்பனுடன் பழக விட்டனர். பெண் யானையைப் பார்த்ததும் மாரியப்பனுக்கு குஷியாகி விட்டது. மதம் குறைந்து,சாந்தமடைந்தது.
தற்போது மாரியப்பன் யானை கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. பாகன் சுகுமார் கூறுவதை கேட்கிறது. யானைக்கு ஏராளமானகரும்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன.
யானைக்குப் பிடித்த மதம் குறித்து கோவில் இணை ஆணையர் அசோக் கூறுகையில், பெண் யானையுடன் உறவு கொள்ளாதகாரணத்தால் தான் மாரியப்பனுக்கு மதம் பிடித்துள்ளது. கமலா யானையைப் பார்த்தவுடன் மாரியப்பனுக்கு மதம் குறைந்துவிட்டது.
மாரியப்பன் சகஜ நிலைக்குத் திரும்பி விட்டதால் சமயபுரத்தில் மூடப்பட்டிருந்த கடைகள் திறக்கப்பட்டன. கோவிலுக்கும்பக்தர்கள் வழக்கம் போல வர ஆரம்பித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications