தேர்தல் பணிகளில் அதிமுக சுறுசுறுப்பு!
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி சட்டசபைத் தொகுதிகளில் அதிமுக தனது தேர்தல் பணிகளை சுறுசுறுப்பாக ஆரம்பித்துள்ளது.
இரு தொகுதிகளிலும் வருகிற மே 14 ம் தேதி இடைத் தேர்தல் நடக்கவுள்ளது. இரு தொகுதகிளிலும் திமுகவும், அதிமுகவும்நேரடியாக மோதுகின்றன. அதிமுக சார்பில் காஞ்சிபுரத்தில் மைதிலி திருநாவுக்கரசும், திமுக சார்பில் பி.எம்.குமாரும்போட்டியிடுகிறார்கள். கும்மிடிப்பூண்டியில் அதிமுக சார்பில் விஜயக்குமாரும், திமுக சார்பில் வெங்கடாச்சலபதியும் களத்தில்நிற்கிறார்கள்.
சுவர்களைப் பிடித்து வைத்து அதில் வேட்பாளரின் பெயரை எழுதும் பணிகள் தொகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.காஞ்சிபுரத்தில் அதிமுக தேர்தல் அலுவலகம் பரபரப்பான காந்தி சாலையில் நேற்று திறக்கப்பட்டது. கட்சியின் பொருளாளர்திண்டுக்கல் சீனிவாசன் அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
தேர்தல் அலுவலகத்தில் கணபதி ஹோம், நவக்கிரஹ ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்டவையும்நடத்தப்பட்டன.
அதிமுக வேட்பாளரின் வெற்றிக்காக 11 அமைச்சர்கள் காஞ்சிபுரத்தில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் தவிர 4 வாரியத்தலைவர்களும், ஏராளமான எம்.எல்.ஏக்களும் இங்கு குவிந்துள்ளனர்.
அமைச்சர்கள் நைனார் நாகேந்திரன், நத்தம் விஸ்வநாதன், அண்ணாவி, வைத்தியலிங்கம், இன்பத்தமிழன், மில்லர், சோமசுந்தரம்,வேலுச்சாமி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன், ராமச்சந்திரன் ஆகியோர் தொகுதியில் முகாமிட்டுள்ளனர்.
இதுதவிர குடிசை மாற்று வாரியத் தலைவர் பாலகங்கா உள்ளிட்ட வாரியத் தலைவர்களும் இங்கு வந்துள்ளனர். வேட்பாளர்மைதிலி திருநாவுக்கரசுவை எப்படியும் வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற நோக்கில், அதிகவினர் தீவிரமாக செயல்பட்டுவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications