மீனாட்சி கோவில் தேரோட்டம்: இன்று நடந்தது
மதுரை:
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடந்தது. இதில் வெளிநாட்டினர் உட்படபல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின்முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது.
இதைத் தொடர்ந்து இன்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. இன்று அதிகாலை 5.15 மணியளவில்அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளினர். தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றன.
காலை 6.15 மணியளவில் சுந்தரேஸ்வரர்-பிரியாவிடை எழுந்தருளியுள்ள தேர் நிலையை விட்டு கிளம்பியது. இந்துஅறநிலையத்துறை அமைச்சர் ராமசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கலெக்டர் ராஜேந்திரன், மீனாட்சி அம்மன் அறங்காவலர் குழு தலைவர் கருமுத்து கண்ணன், நிர்வாக அதிகாரி பாஸ்கரன்,தென்மண்டல ஐ.ஜி.திரிபாதி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமார் உட்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
சுவாமி தேர் கிளம்பிய 30 நிமிடங்கள் கழித்து மீனாட்சி அம்மன் தேர் கிளம்பியது. இந்த தேர் 4 மாசி வீதிகளையும் வலம் வந்து10.30 மணியளவில் நிலையத்தை அடைந்தது.
தேர் திருவிழாவை காண தமிழகம் முழவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்திருந்தனர்.தேரோட்டத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினரும் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications