"லாட்டரி மன்னன் கே.ஏ.எஸ். சேகர் கைது!
மதுரை:
ரூ. 109 கோடி விற்பனை வரி ஏய்ப்பு வழக்கில், பிரபல லாட்டரி விற்பனையாளர் கே.ஏ.எஸ். சேகர் மதுரையில் கைதுசெய்யப்பட்டார். மதுரை சிறையில் அனுமதிக்கப்பட்ட இவர், இன்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார்.
தமிழகத்தில் லாட்டரிச் சீட்டுக்களை அனைத்துத் தரப்பு மக்களிடையேயும் பிரபலப்படுத்தியவர் கே.ஏ.எஸ். சேகர். தமிழகத்தின்மூலை முடுக்குகளிலெல்லாம் சேகரின் கடைகள் இருந்த நிலை ஒரு காலத்தில் தமிழகத்தில் இருந்தது.
லாட்டரிச் சீட்டுத் தொழிலில் ஏற்பட்ட மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து பல்வேறு தொழில்களிலும் சேகர் ஈடுபட்டு வந்தார்.இந்த நிலையில் ரூ. 109 கோடி அளவுக்கு சேகர் விற்பனை வரியைக் கட்டாமல் ஏய்ப்பு செய்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புப்போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர்.
சேகர் தவிர மற்ற 13 பேரும் கைது செய்யப்பட்டனர். சேகர் தலைமறைவாகி விட்டார். மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
தலைமறைவாக இருந்து வந்த நிலையில் மதுரையில் சேகரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர். மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையிலான போலீஸ் படையினர், சேகரின் வீடு, டவுன்ஹால் ரோட்டில்உள்ள ஹோட்டல், கம்ப்யூட்டர் மையங்கள் ஆகியவற்றில் அதிரடி சோதனையும் நடத்தப்பட்டது. அப்போது ஏராளமானதஸ்தாவேஜுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.
கைது செய்யப்பட்ட சேகர் மதுரை தலைமை குற்றவியல் நடுவர் அய்யசாமி முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள்காவலில் வைக்குமாறு நீதிபதி அய்யசாமி உத்தரவிட்டார். அதன் பின்னர் மதுரை மத்திய சிறையில் சேகர் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே சேகர் சர்க்கரை மற்றும் சிறுநீரகக் கோளாறு ஆகியவற்றால் அவதிப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து இன்று அவர்மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications