கடவுளை நம்புகிறவர்கள் பயப்பட தேவையில்லை- புதிய போப் வாழ்த்து செய்தி
வாடிகன்:
கடவுளிடத்தில் நம்பிக்கை வைப்பதின் மூலம் நாம் எதையும் இழக்கப் போவதில்லை என்று நேற்று பதவி ஏற்ற புதிய போப்ஆண்டவர் 16ம் பெனடிக்ட் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்தார்.
போப் இரண்டாம் ஜான் பால் மரணமடைந்ததையொட்டி புதிய போப் ஆண்டவராக ஜெர்மனியை சேர்ந்த ஜோசப் ரட்ஸிங்கர்தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய போப் இனி முதல் 16ம் பெனடிக்ட் என்று அழைக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.
புதிய போப் ஆண்டவரை கர்தினால்கள் ஊர்வலமாக அழைத்து வந்தனர். ஏசுநாதரின் முதலாவது சீடரும், புனிதருமான பீட்டரின்(பேதுரு) உருவம் பொறித்த மீனவர் மோதிரத்தையும், சிவப்பு நிற சின்னங்கள் பொறிக்கப்பட்ட வட்ட வடிவ கம்பளி துண்டையும்கர்தினால் ஜார்ஜ் ஆர்துரோ மெதினா எஸ்தீவஸ் அவருக்கு அணிவித்தார்.
இதன்பின் போப் ஆண்டவர் பதவிக்குரிய திருச்சின்னமான கோலும் அவருக்கு தரப்பட்டது. தொடர்ந்து அவர் அங்கு கூடியிருந்தலட்சக்கணக்கான மக்களை ஆசிர்வதித்தார்.
பதவி ஏற்பு நிகழ்ச்சியைக் காண உலகம் முழுவதிலும் இருந்து 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வாடிகனில் குவிந்திருந்தனர்.அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் சகோதரரும், கவர்னருமான ஜெப் புஷ், ஜெர்மனி அதிபர் ஹோர்ஸ்ட் கோஹ்லர் பிரதமர்ஜெரார்ட் ஷூரோடர் உட்பட பல முக்கிய தலைவர்கள் இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சுமார் 2 மணிநேரம் திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. இதன்பிறகு போப் 16ம் பெனடிக்ட் வாழ்த்து செய்தி அளிக்கையில்,கடவுளிடத்தில் நம்பிக்கை வைப்பதின் மூலம் நாம் எதையும் இழக்கப் போவதில்லை. அந்த நம்பிக்கை தான் நமது வாழ்க்கையைசுதந்திரமானதாக, அற்புதமானதாக மகோன்னதம் மிக்கதாக மாற்றுகிறது என்று குறிப்பிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications