10 அமைச்சர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலின்போது சாலை மறியலில் ஈடுபட்ட 10 அமைச்சர்களும் பதவியில் நீடிப்பதை எதிர்த்துசென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
கடந்த 19ம் தேதி சென்னை மாநகராட்சியின் 2 வார்டுகளுக்கு இடைத் தேர்தல் நடந்தது. அப்போது திமுகவினர் சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குப் போட்டியாக அமைச்சர்களும் சாலை மறியலில் குதித்தனர்.
இந்த நிலையில் சின்னச்சாமி என்ற வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுக சார்பில்நடத்தப்பட்ட போராட்டத்தில் அமைச்சர்கள் பொன்னையன், ஜெயக்குமார், கருப்பசாமி,
மில்லர், வளர்மதி, அனிதா ராதாகிருஷ்ணன், கே.பி.அன்பழகன், ராதாகிருஷ்ணன், வைத்தியலிங்கம், ராமச்சந்திரன் ஆகியோர்கலந்து கொண்டு சாலை மறியல் செய்துள்ளனர்.
அமைச்சர்களாக பதவியேற்றபோது எடுத்துக் கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு எதிரானது இது.
எனவே எந்த அடிப்படையில் அவர்கள் அமைச்சர்களாக நீடிக்கிறார்கள், தொடருகிறார்கள் என்பதை நீதிமன்றம் கேட்கவேண்டும் என்று கோரியிருந்தார் சின்னச்சாமி.
இதற்கிடையே, இடைத் தேர்தல் வன்முறை தொடர்பான வழக்கில் தங்களைக் கைது செய்தால் ஜாமீனில் விட உத்தரவிடக் கோரிதி.நகர் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 9 திமுகவினர் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளனர்.
இடைத் தேர்தல் வன்முறை தொடர்பாக மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திமுகவினர் மீது வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் தி.நகர் எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், கவுன்சிலர்கள் சுப்ரமணியம், தனசேகரன் உள்ளிட்ட 9திமுகவினர் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications