வளர்மதி மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம், அரசுவழக்கறிஞருக்கு உத்தரவிட்டது.

சென்னை மாநகராட்சி வார்டு இடைத் தேர்தலில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர்.

வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் கற்பகவிநாயகமும், நாகப்பனும், சாலை மறியல் செய்த அமைச்சர்களுக்கு கடும் கண்டனம்தெரிவித்துள்ளனர். நேற்று இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது, அமைச்சர்கள் மீது திமுகவினர் புகார் ஏதும்கூறியிருக்கிறார்களா,

அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்ற விவரங்களை தெரிவிக்குமாறு அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்சோமையாஜிக்கு உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி இன்று சோமையாஜி பதில் மனுவைத் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில், அமைச்சர் வளர்மதிஉள்ளிட்டோர் மீது 7 புகார்கள் கூறப்பட்டுள்ளன. அதில் 2 புகார்கள் போலீஸிலும், மற்ற புகார்கள் தேர்தல் ஆணையத்திலும்கொடுக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் வளர்மதி மீதான புகார், வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படக் கூடிய அளவுக்கு கடுமையானது அல்ல என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கற்பகவிநாயகம், அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்பது குறித்து இங்கு கூற வேண்டாம்.அவர்கள் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை மட்டும் அரசுவழக்கறிஞர் தெரிவித்தால் போதும்.

அமைச்சர் வளர்மதி மீது வழக்கு:

அமைச்சர் வளர்மதி மீதான புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்படாமல் இருந்தால் உடனடியாக வழக்குப் பதிவு செய்யவேண்டும் என்றார்.

தொடர்ந்து நீதிபதி கூறுகையில், ஒரு அமைச்சர் வாக்குச் சாவடிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அப்படி நடந்திருக்கக் கூடாதுஎன்று நீதிமன்றம் விரும்புகிறது. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் அது மிகவும் கவலைக்குரியது. அந்தப் புகாரின் மீதுநீதிமன்றம் உத்தரவிட்ட பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அறிய நீதிமன்றம் விரும்புகிறது.

அமைச்சர்கள் சாலைமறியலில் ஈடுபடவில்லை என்று அரசு வழக்கறிஞர் தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தால், சம்பந்தப்பட்டஅமைச்சர்களை கோர்ட்டுக்கு வரவழைத்து விசாரிக்க நேரிடும்.

இந்தப் பிரச்சினையில் திமுக தலைவர்களுக்கும் சில கருத்துக்களைச் சொல்ல நீதிமன்றம் விரும்புகிறது. இந்த வழக்கில் இங்குதெரிவிக்கப்படும் கருத்துக்கள், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தெரிவிக்கப்படுபவை. திமுகவுக்கு ஆதரவாகசொல்லப்படுபவை அல்ல.

வழக்கில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை அரசுக்கு எதிராக திமுகவினர் பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தும் திமுகதலைவர்களை சம்மன் அனுப்பி கோர்ட்டுக்கு வரவழைத்து விசாரிக்க நேரிடும் என்று திமுகவுக்கும் நீதிபதி கற்பகவிநாயகம்எச்சரிக்கை விடுத்தார்.

இதைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து தெரிவிக்க ஒரு நாள் அவகாசம் தேவை என்றுசோமையாஜி கோரினார். இதை ஏற்ற நீதிபதிகள் நாளை மறுநாள் இத்தகவலைத் தெரிவிக்குமாறு கூறி விசாரணையைஒத்திவைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+