தமிழகத்தில் மனித உரிமை மீறல்: ராஜ்யசபாவில் குற்றச்சாட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழகத்தில் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்பட்டு வருவதாக கேரளத்தைச் சேர்ந்த எம்.பிக்கள் ராஜ்யசபாவில் குற்றம்சாட்டினர்.

மாநிலங்களவையில் இன்று பேசிய புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் (ஆர்.எஸ்.பி) எம்.பியான பிரேமச்சந்திரன்,

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவரான அப்துல் மதானிக்குமருத்துவ சிகிச்சை வழங்கக் கூட தமிழக அரசு மறுக்கிறது. கடந்த 7 வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானிக்கு நீரிழிவுநோயும், ஹைபர் டென்சன் நோயும் உள்ளது.

ஆனால், அவருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க தமிழக அரசு மறுக்கிறது என்றார்.

அப்போது பேசிய கேரள காங்கிரஸ் எம்பியான வயலார் ரவி, மதானியின் கால் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது.அதற்கும் கூட உரிய மருந்துகள் தர தமிழக அரசு மறுக்கிறது. அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காவிட்டால் அவரது உயிருக்கேஆபத்து வரலாம்.

இதன்மூலம் தமிழகம் மனித உரிமைகளை மீறுகிறது. கைதிகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து மத்திய அரசு தெளிவான ஒருகொள்கைத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், கைதிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டிய கடமை மாநிலஅரசுக்கு உண்டு. இந்த விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+