காஞ்சி இடைத்தேர்தல்: 46 இடங்களில் கூடுதல் பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் சட்டசபைத் தொகுதியில் பதட்டம் அதிகம் நிறைந்த 46 இடங்களில் கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுசெய்யப்படவுள்ளது.

காஞ்சிபுரம் தொகுதி பாதுகாப்பு குறித்து தேர்தல் பார்வையாளர் ஜெவேஷ் நந்தன், மாவட்ட ஆட்சித் தலைவர் வெங்கடேசன்,காவல்துறைக் கண்காணிப்பாளர் சமுத்திரப் பாண்டி ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையின்போது, பதட்டம் நிறைந்ததாக 46 இடங்கள் அடையாளம் காணப்பட்டன. இங்கு அதிகபட்ச பாதுகாப்பைஅளிக்க முடிவு செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் தொகுதியில் காஞ்சிபுரம் நகராட்சி, காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம், செவிலிமேடு சிறப்பு ஊராட்சி ஆகியவைஉள்ளன. நகராட்சி வார்டுகள் 13ம், ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 13 ஊராட்சிகளும், செவிலிமேடு சிறப்பு ஊராட்சியில் 15வார்டுகளும் உள்ளன.

அனைத்துப் பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு தரவும், பதட்டம் நிறைந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கவும் இந்தக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புதிய நீதிக் கட்சி விலகல்:

இதற்கிடையே, காஞ்சிபுரம் தேர்தலில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சி திடீரென போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.புதிய நீதிக் கட்சியின் சார்பில் வெங்கடேச முதலியார் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அவரது மனு ஏற்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் போட்டியிலிருந்து புதிய நீதிக் கட்சி விலகுவதாக கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தேர்தலில் ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களது முழு பலத்தைப் பிரயோகித்துதேர்தல் களத்தை சந்திக்கின்றன.

எனவே, வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் எங்களுடைய கோரிக்கையை பரிசீலிக்கின்ற கட்சியுடன் உறவு வைத்துக் கொண்டுபோட்டியிடுவது என்று முடிவு செய்து, காஞ்சிபுரம் போட்டியிலிருந்து புதிய நீதிக் கட்சி விலகிக் கொள்கிறது என்று கூறியுள்ளார்சண்முகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+