தென்னங்கன்றும், திமுக தொண்டனும்!
சென்னை:
திமுகவை யாராவது வீழ்த்த நினைத்தால், அவர்கள் எத்தகைய கொம்பாதி கொம்பர்களாக இருந்தாலும் அதில் வெற்றி பெறமுடியாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் திமுக எம்.எல்.ஏ. ஆர்.எஸ்.ஸ்ரீதரின் படத் திறப்பு விழாவும், அவரது குடும்பத்திற்கு நிதியுதவி அளிக்கும்நிகழ்ச்சியும் கோட்டூரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருணாநிதி, ஸ்ரீதரின் படத்தைத் திறந்து வைத்தார்.
பின்னர் ஸ்ரீதரின் முதல் மனைவி ஜெயலட்சுமிக்கு ரூ. 6 லட்சம் நிதியையும், இரண்டாவது மனைவி கமலாவுக்கு ரூ. 4 லட்சம்நிதியையும் அவர் வழங்கினார். பின்னர் கருணாநிதி பேசுகையில், ஒருவர் மற்றவருக்கு வழிகாட்டியாக, மற்றவருக்குபடிக்கல்லாக மாறி இந்த இயக்கத்தை நடத்தி வளர்த்து வருகிறோம்.
அப்படி ஒவ்வொரு மட்டையாக விழுந்து விழுந்து குட்டையாக இருந்த தென்னங் கன்று மரமாக வளரும். அப்படி வளர்ந்தபிறகுதான் அந்த மட்டைகள் இருந்த இடத்தில் ஒரு தழும்பு, ஒரு அடையாளம், ஒரு படி இருக்கும். கால் வைத்து ஏறக் கூடியஅளவுக்கு அந்த படி இருக்கும்.
அந்தப் படிகள் இயற்கையிலேயே நமக்குக் கிடைத்த படிகள். அதில் கால் வைத்து ஏறித்தான் காய் பறிப்பார்கள், இளநீர்பறிப்பார்கள், பயன்படக் கூடிய பொருட்களை எல்லாம் எடுத்துக் கொள்வார்கள். அப்படித்தான் ஸ்ரீதர் போன்றவர்கள்.
இப்படி இந்த இயக்கத்திலே எத்தனையோ தொண்டர்கள், செயல் வீரர்கள், ஆரம்ப காலத்திலே மட்டைகளாக இருந்து அந்தமட்டைகள் எல்லாம் அடுத்தவர் கால் வைத்து ஏறுவதற்கு உகந்த படிகளாக மாறியதைப் போல அவர்கள் படிகளாகமாறியிருக்கிறார்கள்.
அப்படிப் படியாக மாறி விட்ட அருமைத் தம்பியைத்தான் ஆர்.எஸ்.ஸ்ரீதர் வடிவில் நான் காண்கிறேன். திமுக, தொண்டர்களுக்குபஞ்சம் உள்ள கட்சி அல்ல. ஸ்ரீதரைப் போல அயராத உழைப்பாளிகளாக, அஞ்சா நெஞ்சர்களாக ஆயிரக்கணக்கிலே,லட்சக்கணக்கிலே இருக்கின்ற செயல் வீரர்களைக் கொண்டது திமுக.
இந்த கழகத்தை, நான்கைந்து தலைவர்களை அடக்குமுறைக்கு ஆளாக்குவதன் மூலம், சிறையிலே பிடித்து வைப்பதன் மூலம்,அவர்கள் மீது வழக்கு போடுவதன் மூலம் மிரட்டி, உருட்டி வீழ்த்தி விடலாமென்று யார் நினைத்தாலும், அவர்கள் எத்தகையகொம்பாதி கொம்பர்களாக இருந்தாலும் அவர்களுடைய நினைப்பு நிச்சயம் வெற்றி தராது.
காரணம் ஸ்ரீதர் இறந்து விடவில்லை. பல ஸ்ரீதர்களை உருவாக்கி விட்டுத்தான் போயிருக்கிறார் என்றார் கருணாநிதி.
மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications