ாவை கலெக்டர் அலுவலகம் முன் தீக்குளித்தவர் சாவு
கோவை:
கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனளிக்காமல் இன்று இறந்தார்.
கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் சம்பத் (வயது35). கட்டிட தொழிலாளியான இவர் கடந்த சில தினங்களுக்கு முன்,நாகமநாயக்கன்பாளையத்தில் ஒரு மில்லில் கான்கிரீட் வேலை பார்த்தார்.
அப்போது அந்த மில்லின் உரிமையாளர் சண்முகம், தொழிலாளி சம்பத் கொண்டு வந்திருந்த கான்கிரீட் பலகையை உடைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதை சம்பத் தட்டிக் கேட்ட போது சண்முகம், அவரது கூட்டாளிகளும் சம்பத்தை மிரட்டியதாககூறப்படுகிறது.
இது குறித்து சம்பத் சூலூர் போலீஸில் புகார் கொடுத்தார். ஆனால் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் இன்று காலை சம்பத் இறந்தார்.
இறந்த சம்பத்தின் உடலை அவரது உறவினர்கள் வாங்க மறுத்ததால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாகஅங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர். சம்பத்தின் உறவினர்களிடம் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சம்பத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அவரை சாதி பெயரை சொல்லி மிரட்டியதாகவும் சண்முகம்உட்பட 6 பேர் மீது சூலூர் போலீஸில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் போலீஸார் சண்முகத்தின் நண்பர் சென்னியப்பன்,தர்மராஜ், மருதாசலம் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
மேலும் சண்முகம், அவரது மகன் குமார், மில் கண்காணிப்பாளர் ஜெகதீஷ் ஆகியோரை தேடி வருகின்றனர். இவர்கள்பெங்களூருக்குத் தப்பிவிட்டதையடுத்து அவர்களைப் பிடிக்க தனிப் படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications