ஆசிரியை மீனாட்சி மாயமான வழக்கு: சிபிஐக்கு மாற்றப்படுமா?
மதுரை:
குளித்தலை ஆசிரியை மீனாட்சி காணாமல் போன வழக்கை சரியாக தமிழக போலீஸார் முறையாக விசாரிக்காமல் பூச்சாண்டிகாட்டி வருவதால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றலாமா என்று மதுரை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
குளித்தலையைச் சேர்ந்த ஆசியை மீனாட்சி கடந்த நவம்பர் மாதம் காணாமல் போனார். இந்த வழக்கை முதலில் குளித்தலைபோலீஸார் விசாரித்து வந்தனர். மீனாட்சி கடத்தப்பட்டதாகவும், இதில் அதிமுக எம்எல்ஏவும் மாஜி மந்திரியுமான பாப்பாசுந்தரத்துக்கும் தொடர்பிருப்பதாக புகார் எழுந்தது.
ஆனால், குளித்தலை போலீசார் வழக்கை ஏனோ தானோ என்று நடத்தி மனைவி மீனாட்சி காணாமல் போனதால் சோகத்தில்இருந்த கணவரையே தொல்லைக்குள்ளாக்கினர். இதையடுத்து அவர் நீதிமன்றத்தை அணுகவே, வழக்கு சிபிசிஐடிக்குமாற்றப்பட்டது.
சிபிசிஐடி போலீஸாரும் மீனாட்சியின் கணவருக்கே டார்ச்சர் தந்தனர்.
பாப்பா சுந்தரம், அவரது மகன் கருணாகரன், உறவினர்களிடமும் சிபிசிஐடி விசாரணை நடத்தினாலும் மீனாட்சியை அவர்களால்கண்டுபிடிக்க முடியவில்லை.
இந் நிலையில் வழக்கின் இறுதி விசாரணை அறிக்கையை புதன்கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஏற்கனவேஉயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோரிடம் சிபிசிஐடிஎஸ்.பி இறுதி விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அதற்கு நீதிபதிகள், மீனாட்சி காணாமல் போனது தொடர்பான வழக்கில் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று சிபிசிஐடிதாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையைத் தொடர கால அவகாசம் தேவை என்றும்கேட்டுள்ளனர். இதை ஏற்று வழக்கு விசாரணை ஜூன் 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
அன்று இன்னொரு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யலாம். அப்போது, இந்த வழக்கை சிபிஐ போன்ற புலனாய்வுஅமைப்புக்கு மாற்றலாமா என்பதையும் ஆராய்ந்து அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள்உத்தரவிட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications