கருணாநிதி அறிவுரை கூறலாமா?: பாஜக கேள்வி
சென்னை:
அடிக்கடி சட்டசபை புறக்கணிப்பில் ஈடுபடும் திமுகவினரின் தலைவரான, சட்டசபைக்கே போகாத திமுக தலைவர் கருணாநிதி,பாஜகவினரின் நாடாளுமன்றப் புறக்கணிப்பு குறித்து வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கு அறிவுரை கூற தகுதி படைத்தவர்அல்ல என்று தமிழக பாஜக தலைவர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீது சுமார் ரூ.60 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்பதவியில் நீடிக்கக் கூடாது என்று வாஜ்பாய், அத்வானி ஆகியோர் வாய் திறந்தது உண்டா? இங்குள்ள பாஜக சட்டமன்றஉறுப்பினர்களாவது அதைக் கேட்டதுண்டா?
சங்கரராமன் கொலை வழக்கில் சாதாரண குற்றப் பத்திரிகையை கோவில் சன்னதியில் வைத்து பூஜை செய்துசங்கராச்சாரியார்களுக்கு வழங்கப்பட்டுள்ளதே. அதற்காக அவர்கள் மடத்தின் தலைமை பதவிகளில் நீடிக்கக் கூடாது என்றுபாஜக தலைவர்கள் நாவை அசைத்தது உண்டா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
கருணாநிதியின் இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதத்தில் ராதாகிருஷ்ணன், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம்கூறியதாவது:
குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், லாலு பிரசாத் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க கூடாது என்று பாஜகவலியுறுத்துகிறது. இதைக் கூறினால், எங்களுக்கு அறிவுரை கூற வந்து விட்டார் கருணாநிதி.
இது திமுகவின் கையாலாகாத தன்மையையே காட்டுகிறது. சட்டசபை புறக்கணிப்பில் ஈடுபட்ட திமுகவுக்கு, பாஜகதலைவர்களுக்கு அறிவுரை கூற அருகதை கிடையாது. சட்டசபைக்கே போகாத கருணாநிதிக்கு,பாஜக தலைவர்களுக்கு யோசனைகூற தகுதி கிடையாது என்று பதிலடி தந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications