For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டிஎஸ்பி வழக்கில் பரபரப்பு: தேடிச் சென்ற ஏட்டு மர்ம சாவு

By Staff
Google Oneindia Tamil News

உதகை:

காணாமல் போய் விட்ட ஓமலூர் டி.எஸ்.பி. மணிரத்தினத்தைத் தேடிச் சென்ற தனிப் படையில் இடம் பெற்றிருந்த தலைமைக்காவலர் ஒருவர் உதகை அருகே அணையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் டி.எஸ்.பியாக இருந்த மணிரத்தினம், திடீரென தலைமறைவாகி விட்டார். கண்காணிப்பாளர் பொன்மாணிக்கவேல் தன்னை மிகவும் அவதூறாகவும், கேவலமாகவும் நடத்தியதால்,

தனது குடும்பத்தைக் கூட கவனிக்க முடியாத அளவுக்கு தள்ளப்பட்டதாகவும் இதனால் தான் தலைமறைவாகி விட்டதாகவும்அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். மேலும் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் மணிரத்தினம் கடிதத்தில்கூறியிருந்தார்.

இந் நிலையில், மணிரத்தினத்தை தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் மேற்கு மண்டல காவல்துறை முடுக்கி விடப்பட்டுள்ளது.மேற்கு மண்டல ஐ.ஜி. சுப்ரமணியத்தின் நேரடி மேற்பார்வையில், டிஐஜி தமிழ்ச் செல்வன் தலைமையில் தீவிர தேடுதல் வேட்டைநடந்து வருகிறது.

உதகையிலிருந்து ஒரு போலீஸ் படையும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அந்தப் படையில் ரங்கப்பன் என்றதலைமைக் காவலரும் இடம் பெற்றிருந்தார். 26ம் தேதி இந்தத் தனிப்படையில் சேர வந்த ரங்கப்பனை அதன் பிறகுகாணவில்லை. இதையடுத்து ரங்கப்பனையும் போலீஸார் தேடி வந்தனர்.

மர்ம சாவு:

இந் நிலையில் உதகையில் உள்ள நீர்த் தேக்கம் அருகே பிணமாக ரங்கப்பன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தண்ணீரில் மூழ்கி அவர்இறந்துள்ளார். காணாமல் போன டி.எஸ்.பியைத் தேடிக் கண்டுபிடிக்கச் சென்ற ரங்கப்பன் மர்மமான முறையில் இறந்துள்ளதுமேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, மணிரத்தினத்திடம் தற்போது பணம் இல்லாத நிலை ஏற்பட்டிருக்கும் என்பதால் கோவை, ஈரோடு,சத்தியமங்கலம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில், மணிரத்தினம் கணக்கு வைத்துள்ள வங்கிகளின் ஏ.டி.எம். மையங்கள் தீவிரமாககண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இவர் கடவுள் பக்தி நிறைந்தவர் என்பதால், மேற்கு மண்டலத்தில் உள்ள 7 மாவட்டங்களிலும் உள்ள முக்கியக் கோவில்களிலும்போலீஸ் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவுக்கு ஒரு வேளை அவர் செல்லக் கூடும் என்பதால்அங்கும் ஒரு படை விரைந்துள்ளது.

மணிரத்தினம் முன்பு இன்ஸ்பெக்டராக வேலை பார்த்த சத்தியமங்கலம் பகுதிக்கு டிஐஜி தமிழ்ச் செல்வன் சென்று விசாரணைநடத்தினார். இதேபோல, காணாமல் போவதற்கு முன்பு மணிரத்தினம் தங்கியிருந்த மேட்டுப்பாளையத்திற்கு ஐ.ஜி.சுப்ரணியம்சென்று விசாரணை நடத்தினார்.

மணிரத்தினத்தின் கையில் இருக்கும் செல்போனையும் போலீஸார் கண்காணித்து வருகிறார்கள். ஆனால் அதிலிருந்து இதுவரைஅவரது குடும்பத்தினருக்கு ஒரு போன் கூட வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே சர்ச்சையில் சிக்கியுள்ள எஸ்.பி. பொன் மாணிக்கவேலுவிடம், டிஜிபி அலெக்சாண்டர் மற்றும் கூடுதல் டிஜிபிஆகியோர் தொலைபேசியில் பேசி விவரத்தைக் கேட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X